சரஸ்வதி துதி மந்திரம்..!

சரஸ்வதி துதி மந்திரத்தை சொல்வதால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

சரஸ்வதி துதி மந்திரம்

ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி!

சகலகலாவல்லி சாரபிம்பாதரி!

சாரதாதேவி சாஸ்திரவல்லி!

வீணா புஸ்தகராணி வாணி!

கமலபாணி வாக்தேவி வரநாயகி!

புஸ்தகஹஸ்தே நமோஸ்துதே!

பொருள்

கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே! சகல கலைகளுக்கும் தலைவியே! பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே! ‘சாரதை’ என்னும் வீணையை ஏந்தியவளே! சாஸ்திரங்களுக்கு அரசியே! இசைக்கும், இனிய நூல்களுக்கும், பாட்டுக்கும் தலைவியே! வெள்ளைத் தாமரையில் அமர்ந்தவளே! நல்ல சொற்களுக்குரியவளே! விரும்பிய வரங்களைக் கொடுப்பவளே! புத்தகத்தைக் கையில் உடையவளே, நல்லறிவு தருபவளே! உன்னை வணங்கி போற்றுகின்றேன்.

இதையும் படிக்கலாம் : சரஸ்வதி பஜனை பாடல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *