/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ கனைத்து அதிர்க்கும் (திருத்தணிகை) - திருப்புகழ் 259

கனைத்து அதிர்க்கும் (திருத்தணிகை) – திருப்புகழ் 259 

கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட – லொன்றினாலே
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு – திங்களாலே

தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச – ரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச – ழங்கலாமோ

தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம – டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் – கந்தவேளே

பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய – மங்கைபாகா
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் – தம்பிரானே.

இதையும் படிக்கலாம் : கிரி உலாவிய (திருத்தணிகை) – திருப்புகழ் 260 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *