கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
கபட நாடக விரகிக ளசடிகள்
கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் – விரகாலே
க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
முழுது நாறிக ளிதமொழி வசனிகள்
கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் – பொருளாலே
பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
அதிக மாவொரு பொருள்தரு பவரொடு
பழைய பேரென இதமுற அணைபவர் – விழியாலே
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை
பகர மாமயில் மிசைவர நினைவது – மொருநாளே
அரிய ராதிபர் மலரய னிமையவர்
நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ
அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக – இளையோனே
அரிய கானக முறைகுற மகளிட
கணவ னாகிய அறிவுள விதரண
அமரர் நாயக சரவண பவதிற – லுடையோனே
தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
சரிவு றாநிலை பெறுதவ முடையவர்
தளர்வி லாமன முடையவ ரறிவினர் – பரராஜர்
சகல லோகமு முடையவர் நினைபவர்
பரவு தாமரை மலரடி யினிதுற
தணிகை மாமலை மணிமுடி யழகியல் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கிறி மொழி (திருத்தணிகை) – திருப்புகழ் 261