சிவபெருமான் மும்மூர்த்தி கடவுள்களில் ஒருவர். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மன் படைத்தலின் கடவுள் ஆவார். விஷ்ணு காத்தலின் கடவுள் ஆவார். சிவபெருமான் அழித்தலின் கடவுள் ஆவார். சிவபெருமான் உயிர்களை அழிப்பவர் மட்டுமல்ல, மனிதர்களின் தீய எண்ணங்களையும் அழிப்பதில் வல்லவர். மேலும் ஒருவரின் உள்ளார்ந்த தீய எண்ணங்கள் அழிந்தாலே அவர்கள் மறுபிறவி எடுத்தவர்கள் போன்று மாறுபட்டவர்கள்.
மகாவிஷ்ணுவைப் போல சிவபெருமானும் சில அவதாரங்களை எடுத்திருக்கிறார். சிவபெருமான் 19 அவதாரமும் மனிதர்களை காப்பாற்ற தீமையை அழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
- பிப்லாட் அவதாரம்
- நந்தி அவதாரம்
- வீரபத்திர அவதாரம்
- பைரவ அவதாரம்
- அஸ்வத்ஹமா அவதாரம்
- ஷரபா அவதாரம்
- க்ரஹபதி அவதாரம்
- துர்வாசா அவதாரம்
- அனுமான் அவதாரம்
- ரிஷப அவதாரம்
- யாதிநாத் அவதாரம்
- கிருஷ்ண தர்ஷன் அவதாரம்
- பிக்ஷுவர்யா அவதாரம்
- சுரேஷ்வர் அவதாரம்
- கீரத் அவதாரம்
- சுண்டன்டர்கா அவதாரம்
- பிரமச்சாரி அவதாரம்
- யக்சேஷ்வர் அவதாரம்
- அவதுட் அவதாரம்
பிப்லாட் அவதாரம்
தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான். அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான்.
பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தான். அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
நந்தி அவதாரம்
நந்தியானவர், சிவனின் வாசல் காப்பாளன். நந்தியின் அனுமதியின்றி எவரும் ஈசனைக் காண இயலாது என்று புராணங்கள் சொல்கின்றன.
பெரிய காளையின் தோற்றத்தில் இருக்கும் நந்திக்கு, சிவாலயங்கள் அனைத்திலும் வழிபாடுகள் இருப்பதோடு, பிரதோஷத்தின் போது, இந்த நந்தியே வழிபாடுகளில் முக்கியமானவராக இருப்பார். மந்தைகளின் பாதுகாவலனாக, சிவபெருமானின் இந்த நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.
வீரபத்திர அவதாரம்
தட்சன் நடத்திய டக்ஷ்ணா யாகத்தில், பார்வதி தன்னை பலியாக்கி கொண்டார். இதனால் தட்சன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் உண்டானது. அப்போது தன் தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர்கள் தான் வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி. சிவபெருமானின் கடுமையான அவதாரமாக, வீரபத்திரர் அவதாரம் பார்க்கப்படுகிறது.
மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தட்சனின் வெட்டுண்ட தலையை கரத்தில் தாங்கியபடி இருக்கும்.
பைரவ அவதாரம்
முற்காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் பிரம்மன், தன்னையும் ஈசனுக்கு நிகரானவராக எண்ணி ஆணவம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘பைரவர்’ அவதாரம். சிவபெருமான் பைரவ வடிவத்தில், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை தனது கைகளால் கொய்தார். வேதங்களைக் கற்றறிந்த பிரம்மனின் தலையைக் கொய்ததால், பைரவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’உண்டானது.
இதனால் பிரம்மனின் தலையானது, மண்டை ஓடாக பைரவரின் கைகளைப் பற்றிக்கொண்டது. இதையடுத்து அந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து நிரம்பும் வேளை வரை, 12 ஆண்டுகள் பிட்சாடனராக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து அவர் சுற்றி திரிய வேண்டி இருந்தது. பைரவர் வடிவத்தில் அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வருவதாக நம்பப்படுகிறது.
அஸ்வத்ஹமா அவதாரம்
அமிர்தம் வேண்டி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, முதலில் வெளிவந்தது ஆலகாலம் என்னும் கொடிய விஷம்தான். அந்த கொடிய நஞ்சை சிவபெருமான் உட்கொண்டார். அது அவர் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி, ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். அதனால் விஷம் தொண்டையிலேயே நின்று விட்டது. கழுத்தில் நின்ற விஷத்தால் ஈசனுக்கு எரிச்சல் உண்டானது.
அந்த எரியும் தன்மை ஒரு உருவம் பெற்று வெளிப்பட்டது. அந்த உருவத்திற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன் படி, ‘பூமியில் துரோணரின் மகனாக பிறந்து எதிர்த்து நின்ற அனைத்து சத்ரியர்களையும் கொல்வான்’ என்பதே அந்த வரம். அந்த உருவ அவதாரமே ‘அஸ்வத்தாமன்’என்கிறார்கள்.
ஷரபா அவதாரம்
இரணியகசிபு என்ற அரக்கனைக் கொன்ற பிறகு நரசிம்மரை அமைதிப்படுத்தத் தோன்றியது. சிவ புராணத்தின் படி, விஷ்ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க ஷரபா வடிவத்தை எடுத்தார் சிவபெருமான். ஷரபா வடிவத்திலான சிவபெருமான் பாதி சிங்கம் மற்றும் பாதி பறவை போல தோற்றமளிக்கும் ஒரு மனிதனாக இறைவன் தோன்றினார்.
க்ரஹபதி அவதாரம்
விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் அவரது மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு க்ரஹபதி என பெயரிட்டார் விஸ்வனார்.
க்ரஹபதிக்கு 9 வயதான போது, அவர் இறக்க போகிறார் என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தார் நாரதர். அதனால் மரணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் க்ரஹபதி. அங்கே சிவ பெருமானிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் க்ரஹபதி.
துர்வாசா அவதாரம்
அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இந்த வடிவத்தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவியாவார்.
அனுமான் அவதாரம்
குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் ஒரு அவதாரமாகும். ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந்திடவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார்.
ரிஷப அவதாரம்
அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தனர். இந்த நிகழ்வுக்குப்பிறகு, பாதாள உலகத்திற்குச் சென்றார் விஷ் ணு பகவான். அப்போது அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அவர்களுக்கு பல பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தொல்லைகளை அளித்து வந்தனர். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டி நின்றனர்.
சிவபெருமானும் ‘தருமம்’ என்னும் ரிஷப வடிவம் கொண்டு, விஷ்ணுவின் மகன்கள் அனைவரையும் அழித்தார். தன் மகன்களை அழித்த ,காளையுடன் சண்டையிட விஷ்ணு பகவான் வந்த போது அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அறிந்ததும், அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.
யாதிநாத் அவதாரம்
ஆகூக் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவனும், அவனது மனைவியும் தீவிரமான சிவ பக்தர்கள். ஒரு முறை யாதிநாத் என்ற பெயரில் சிவபெருமான், ஆகூக் குடிசைக்கு சென்றார். அந்த குடிசையில் இருவர் மட்டுமே தங்க முடியும். அதனால் அன்றிரவு கணவனும் மனைவியும் வெளியில் படுத்துக் கொண்டு, விருந்தாளியாக வந்தவரை, வீட்டிற்குள் தங்கியிருக்க அனுமதித்தனர்.
அன்று இரவு கொடிய வன விலங்கு ஒன்றால் ஆகூக் கொல்லப்பட்டான். இதையடுத்து அவனது மனைவியும் சாக நினைத்தால். அப்போது தன் உண்மையான ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார். அதன் படி, அவளும் அவள் கணவனும் நளன் மற்றும் தமயந்தியாக பிறக்கும்படி வரமளித்தார்.
கிருஷ்ண தர்ஷன் அவதாரம்
ஒருவரின் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
பிக்ஷுவர்யா அவதாரம்
அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
சுரேஷ்வர் அவதாரம்
தன் பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவை ஒரு முறை எடுத்தார் சிவபெருமான். அதனால் தான் அவரை சுரேஷ்வர் என்று அழைக்கிறோம்.
கீரத் அவதாரம்
ஒரு முறை வனத்திற்குச் சென்ற அர்ச்சுனன், அங்கு கடுமையான தவத்தை மேற்கொண்டான். அந்த நேரத்தில் அவனைக் கொல்வதற்காக, ‘மூக்கா’ என்ற அசுரனை துரியோதனன் வனத்திற்கு அனுப்பினான்.
காட்டுப்பன்றி உருவமெடுத்த அந்த அசுரன், அர்ச்சுனனைக் கொல்ல விரைந்து வந்தான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு, காட்டுப்பன்றியின் சத்தம் கவனச் சிதறலை உண்டாக்கியது. இதையடுத்து கண்களைத் திறந்து பார்த்த அர்ச்சுனன், தன்னை நோக்கி வரும் காட்டுப்பன்றியை வீழ்த்த அம்பு எய்தினான்.
அப்போது எங்கிருந்தோ வந்த மற்றொரு அம்பும் அந்தக் காட்டுப்பன்றியின் உடலை துளைத்தது. மற்றொரு அம்பு வந்த திசையை அர்ச்சுனன் நோக்கிய போது, அங்கு ஒரு வேடுவன் வந்து கொண்டிருந்தான். இப்போது யார் முதலில் காட்டுப்பன்றியை வீழ்த்தியது என்ற சண்டை அவர்களுக்குள் எழுந்தது. ஒரு கட்டத்தில் வேடுவனாக இருந்த சிவபெருமான், தான் யார் என்பதை அர்ச்சுனனுக்கு காட்டினார். அர்ச்சுனன், ஈசனை வணங்கி நின்றான். இதையடுத்து அவனுக்கு பாசுபத அஸ்திரத்தை சிவபெருமான் வழங்கினார்.
சுண்டன்டர்கா அவதாரம்
திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமாலயாவி டம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.
பிரமச்சாரி அவதாரம்
சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க இந்த அவதாரத்தை எடுத்தார் ஈசன்.
யக்சேஷ்வர் அவதாரம்
கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத்தை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.
அவதுட் அவதாரம்
இந்திரனின் இறுமாப்பை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்
இதையும் படிக்கலாம் : சிவ 14 தாண்டவம் ஸ்தலங்களும்..!