சிவ 14 தாண்டவம் ஸ்தலங்களும்..!

siva thandavam

சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ தாண்டவம் உலக நலனை நோக்கியே நிகழ்ப்படுவதாகவும், அதனுடைய நோக்கமானது உயிர்களை மலங்கள் (குற்றங்கள்) பிடியிலிருந்து விடுவிப்பதாகும். சிவதாண்டவத்தில் சிவனின் உடலமைப்பு அணி கலன்கள் கைகளில் உள்ள படைக்கலன்கள், தலைமுடி மற்றும் பாதங்களின் அமைப்பு ஆகிய அனைத்திற்குமே மெய்ப்பொருளியல் விளக்கங்கள் சைவர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவங்களும் வெவ்வேறு மெய்பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றன.

சிவ 14 தாண்டவம் ஸ்தலங்களும்

1. காளிகா தாண்டவம்

சிவபெருமானின் காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது.

தலம் – நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி.

ஆடிய இடம் – தாமிர சபை

2. சந்தியா தாண்டவம்

சிவபெருமானின் சந்தியா தாண்டவம் – காத்தல் செய்யும் போது.

தலம் – மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை.

ஆடிய இடம் – வெள்ளி அம்பலம்

3. சங்கார தாண்டவம்

சிவபெருமானின் சங்கார தாண்டவம் – அழித்தல் செய்யும் போது.

4. திரிபுர தாண்டவம்

சிவபெருமானின் திரிபுர தாண்டவம் – மறைத்தல் செய்யும் போது.

தலம் – குற்றாலநாதர் கோவில், குற்றாலம்.

ஆடிய இடம் – சித்திர சபை.

5. ஊர்த்துவ தாண்டவம்

சிவபெருமானின் ஊர்த்தவ தாண்டவம் – அருளல் செய்யும் போது.

தலம் – ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு.

ஆடிய இடம் – இரத்தின சபை.

6. ஆனந்த தாண்டவம்

சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் – இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம்.

தலம் – நடராஜர் கோவில், சிதம்பரம்.

ஆடிய இடம் – கனக சபை.

7. கௌரி தாண்டவம்

சிவபெருமானின் கௌரி தாண்டவம் – பார்வதிக்காக ஆடிய போது.

தலம்- திருப்பத்தூர்.

8. அஜபா நடனம்

அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம்.

ஆடிய தலம் – திருவாரூர்

9. உன்மத்த நடனம்

சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும்.

ஆடிய தலம் – திருநள்ளாறு.

10. தரங்க நடனம்

தரங்க நடனம் என்பது கடல் அலை போல் அசைந்து ஆடுவது.

ஆடிய தலம் – நாகப்பட்டினம்

11. குக்குட நடனம்

குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது.

ஆடிய தலம் – திருக்காறாயில்.

12. பிருங்க நடனம்

பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது.

ஆடிய தலம் – திருக்கோளிலி

13. கமல நடனம்

கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது.

ஆடிய தலம் – திருவாய்மூர்.

14. ஹம்சபாத நடனம்

ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது.

ஆடிய தலம் – திருமறைக்காடு (வேதாரண்யம்)

இதையும் படிக்கலாம் : சிவபெருமானின் 19 அவதாரங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *