தற்போதைய காலகட்டத்தில், எல்லா உணவுப் பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்க பழகி விட்டோம். ஏனெனில் பரபரப்பான வாழ்க்கை முறையில், எஞ்சிய உணவு மற்றும் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது கூடுதலான உணவை முன்கூட்டியே சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துகிறோம். மேலும் நாம் பல்பொருள் அங்காடியில் வாங்கும் பல பொருள்களை நாள்பட உபகோகிப்பதற்க்காக ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம்.
ஃப்ரிட்ஜில் நாம் வைக்கும் சில உணவு பொருட்கள்கள் ஆபத்தானவையாக மாறி உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருட்களின் பட்டியல்களை பார்க்கலாம்.
பால்
பால் மற்றும் பால் பொருள்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் பால் உறைந்து திரவமாகி அது துகள்களாகவும், நீர் பாகங்களாகவும் மாறுகிறது. மேலும் பாலில் உள்ள கொழுப்புச் சத்தும் பிரிந்து விடுகிறது.
பிரெட்
பிரெட் போன்ற பேக்கரி பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிகமான குளிரில் விறைத்துப் போகும். இதனால் சுவையும் கெட்டு, கெட்டித்துவிடும்.
முட்டை
முட்டைகளை அதன் முட்டை ஓடுகளுடன் குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் கெட்டுப்போகச் செய்கிறது. ஃப்ரிட்ஜில் முட்டையை சேமித்து வைக்கும் போது, நீரின் உள்ளடக்கம் விரிவடைந்து வெளிப்புற ஓடுகளில் விரிசலை ஏற்படுத்துகிறது. இந்த விரிசல்கள் பல பாக்டிரியாக்களை உருவாகின்றன.
எனவே முட்டையை காற்று புகாத டப்பாவில் வைப்பது நல்லது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் நீர்ச்சத்து நிறைத்து இருக்கிறது. இதை ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் போது மென்மையான மற்றும் மெல்லிய உருளைக்கிழங்காக மாறும்.
தக்காளி
குளிர்சாதன பெட்டியில் தக்காளியை வைப்பதால், அது சுவையை இழந்து, மிருதுவாக மாறுவதோடு அதன் அமைப்பும் மாறுகிறது.
சாஸ்
சாதாரண சூழலில் அடுப்படியில் பாட்டில்களில் பாதுகாத்து வைப்பதே சிறந்தது. தரமான சாஸ்கள் பல நாள்கள் வரை கெடாமல் இருக்கக்கூடியவை. இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை.
ஃபிரிட்ஜில் சாஸ்களை வைப்பதால் சாஸின் சுவையும், காரமும் குறைந்துவிடும்.
மசாலா பொருட்கள்
மசாலாப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் சுவை மற்றும் அமைப்பை பாதிக்கலாம்.
இதையும் படிக்கலாம் : அஜீரணம் நீங்க இதை செய்தாலே போதும்…!
வெங்காயம்
ஃபிரிட்ஜில் வெங்காயத்தை வைப்பதால் அதன் வாசனை குளிர்சாதன பெட்டியில் பரவுவது மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகள் மற்றும் உணவுகளில் வெங்காய வாசனை உண்டாக்கும்.
நட்ஸ்
ஃபிரிட்ஜில் உள்ள குளிர்ந்த ஈரப்பதம் நட்ஸ்களின் உள்ளிருக்கும் எண்ணெய்ப் பொருள்களைப் பாதித்து, கெட்டுவிடச் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் வேறு பொருள்களின் வாசத்தால் மாறிவிடும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்ற எந்த உலர்க்கொட்டைகளையும் ஃபிரிட்ஜில் வைக்க தேவையில்லை.
நீர்ச்சத்து மிகுந்த காய்கனிகள்
பூசணி, தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து மிக்க காய்கறிகளையும் பழங்களையும் கூட ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஏனெனில் இந்த வகை காய்கனிகள் குளிரால் உடைந்து குழைந்துவிடும். ஆனால்,
இவ்வகை காய்கறிகளையும், பழங்களையும் நறுக்கி, 4-5 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.
தேன்
இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட பொருள் தேன். ஆனால், ஃபிரிட்ஜில் தேனை குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும் போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல் போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். மேலும் தேனை உபயோகிக்க முடியாத அளவுக்கு மாறிவிடும்.
இதையும் படிக்கலாம் : சருமத்தைப் பாதுகாக்கும் இயற்கையான ஃபேஸ் பேக்குகள்