வெந்தயத்தின் அற்புத மருத்துவ பயன்கள்..!

வெந்தயம் தமிழில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. இரும்பு சத்து மனித உடலுக்கு தேவையான ஒன்றாகும். அந்த இரும்பு சத்தை வெந்தயம் நமக்கு அளிக்கிறது.

இதனால் மனித உடலை இரும்பு போல் ஆக்க கூடிய தன்மை வெந்தயத்திற்கு உள்ளது. அதே போல் வெந்தயத்தின் கீரையும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

ட்ரோயோனெல்லா ஓயனம் கிரிக்கம் என்ற தாவர பெயரை கொண்டிருக்கும் வெந்தயம், ட்ரைகோ நெல்லின் என்ற மருத்துவ பொருளை கொண்டுள்ளது.

வெந்தயத்தை தினமும் கால் ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது. வெந்தயம் பலவகையான உடல்நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வாக உள்ளது.

இதய ஆரோக்கியம்

வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுத்து, பிற்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

தோல் நோய்கள்

நமது தோல்களில் கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் சில பூச்சி கடிகளால் கொப்பளங்கள் புண்கள் போன்றவை ஏற்படுகின்றன.

இதற்கு வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அரிப்புகள் புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர நோய் குணமாகும்.

செரிமான கோளாறுகள்

ஒரு மனிதனுக்கு செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருந்தாலே அவன் எந்த நோய்களும் அண்டாமல் நலமாக இருக்க முடியும்.

உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக அரைத்து விழுதாக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

நீரிழிவு

கணையத்தில் இன்சுலின் என்கிற சுரப்பில் கோளாறு ஏற்படுவதால் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வெந்தயம் மற்றும் வெந்தய கீரைகளை அடிக்கடி உண்ண நீரழிவு ஏற்படாமல் தடுக்கும் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.

சிறுநீரகம்

ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்வது சிறுநீரகங்கள். வெந்தயம் ஊற வாய்த்த நீரையோ அல்லது வெந்தையதை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். மூத்திரக்கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.

மாதவிடாய் பிரச்சனைகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் இந்த மாதவிடாய் இயற்கையானதே. ஆனால் சில பெண்களுக்கு மட்டும் இது வலி நிறைந்ததாக மாறி விடுகிறது.

இப்படியான வலி நிறைந்த காலத்தில் இரவு நேரத்தில் சிறிது வெந்தயங்களை அரைத்து சாப்பிட்டு சிறிது நீரை அருந்திவர குணம் கிடைக்கும்.

வயிற்றுபுண்கள்

ஜுரம் மற்றும் நெடு நாட்கள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெரும். வயிற்று புண்களும் குணமாகும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம், வியர்வை நாற்றம் இரண்டுக்கும் இது உதவும். சிறிது வெந்தயத்தை வெந்நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்து, வெறும் வயிற்றில் அருந்தலாம். இது, குடலின் ஜீரணச் சுரப்புகளைச் சீராக்குவதன் மூலம், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும்.

தலைமுடி

தலைமுடி உச்சந்தலையை வெளிப்புற சீதோஷணங்களிலிருந்து காக்கிறது. ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசுந்தயிரில் கலந்து அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரத்திற்கு பின்பு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கும். முடி மென்மையாகும்.

தாய்ப்பால் சுரப்பு

புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு அந்த பெண்கள் வெந்தயத்தை தினமும் இருவேளை உணவுகளில் உட்கொண்டு வர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

அந்த தாய்ப்பாலை அருந்தும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.

புற்றுநோய் தடுப்பு

வெந்தயத்தில் உள்ள பல இயற்கை வேதி பொருட்கள் புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்க வல்லது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இதை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தீவிர தன்மை குறையும்.

வாயுத் தொல்லை

வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும். உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகப் பொடி கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

இதையும் படிக்கலாம் : முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *