முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

mulaikattiya payirukal

முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்க வைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உண்ணலாம். முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது.

முளைகட்டிய பயிரில் உள்ள சத்துக்கள்

 • வைட்டமின் சி மற்றும் இ
 • புரதம்
 • கார்போஹைட்ரேட்
 • பீட்டா
 • கரோட்டின்
 • ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும்

பயறுகளை முளைகட்டுவது எப்படி

நம்முடைய அன்றாட வாழ்க்கையில், எளிதில் கிடைக்கும் பயறு வகைகளையே முளைகட்டச் செய்யலாம்.

முளை கட்டுவதும் மிகவும் சுலபம், எந்த வகை தானியமாக இருந்தாலும் அதை நன்கு கழுவி இரவு முழுவதும் கிட்டத்தட்ட எட்டு முதல் 12  மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாளைக்கு நன்கு ஊறிய பயறுகளில் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு மெல்லிய துணியில் ஊறிய  தானியங்களை கட்டி சூரிய ஓளி படுப்படியான நல்ல காற்றோட்டமான இடத்தில் தொங்கவிட்டால் குறைந்தது 8 மணி நேரத்தில் அதிலிருந்து புதிய முளைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

சில தானியங்கள் முளை விட அதிக நேரம் எடுக்கும், அதுவரை போதுமான தண்ணீரை தெளித்து வர வேண்டும் இல்லாவிடில் தானியம் காய்ந்து விடும் அல்லது அழுகி விடும். பெரும்பாலும் முளைவிட்ட தானியங்களை பச்சையாகவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும் அல்லது வேகவைத்தும் பிடித்த விதத்தில் செய்து சாப்பிடலாம்.

எவ்வளவு அளவு சாப்பிடலாம்?

காலை உணவாக பயிறு வகைகளை எடுக்கும் போது 50-65 கிராம், மதிய உணவு எனில் 70 – 80 கிராம், இரவு உணவு எனில் 70 – 75 கிராம் என்ற அளவில் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம்.

உணவுடன் முளைகட்டிய பயிறு வகைகளை சாப்பிடும்போது பாதி அளவு சாப்பாடு, பாதி அளவு முளைகட்டிய தானியம் என்று இருக்குமாறு சாப்பிடலாம். இந்த அளவு முறை குறையலாம், ஆனால் அதிகமாகக் கூடாது.

இதையும் படிக்கலாம் : ரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது?

காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிட கூடாது. காரணம், தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டச் செய்வதால் அமிலத்தன்மை அதிகரித்து இருக்கும்.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரக்கும். அப்போது முளைகட்டிய தானியத்தை சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, பிரச்சனைகளை தவிர்க்க ஏதாவது ஒரு காலை உணவுடன் வேகவைக்காத முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவது நல்லது.

குழந்தைகளுக்கு அத்தியாவசியம்

சில சமயம் முளை கட்டிய தானியங்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

 5 – 10 வயதுக்  குழந்தைகளுக்கு முளைகட்டிய பச்சைப் பயறுகளை அடிக்கடி தரலாம். மற்ற முளைகட்டிய பயறுகளை எப்போதாவது கொடுப்பது நல்லது.

வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் முளைகட்டிய தானியங்களை நன்றாக வேக வைத்து தினமும் 30 முதல் 50 கிராம் வரை காலை உணவோடும், மதிய உணவோடும் தரலாம்.

முளைகட்டிய பயறுகளின் வகைகள்

பச்சைப்பயிறு

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் சீரான ரத்த ஓட்டத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற உணவாகும். இது எலும்பு வளர்ச்சிக்கும், பெருங்குடல் தொந்தரவுகளைத் தீர்த்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.

கொண்டைக்கடலை

முளை கட்டிய கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடின வேலை செய்பவர்கள் அதிகம் சாப்பிடுவதால் சக்தி குறையாமல் வைத்துக்கொள்ளும். மேலும் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

தட்டைப்பயறு

முளை கட்டிய தட்டை பயறு மலச்சிக்கல் பிரச்னைககளை நீங்கி, வயிறு சம்பந்தப்பட்ட செரிமானம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது.

உளுத்தம் பயறு

முளை கட்டிய உளுந்தை சாப்பிடும் போது உடல் சோர்வு நீங்கி, உற்சாகம் தரும். மேலும் மன அழுத்தத்தை போக்கி தூக்கமின்மை பிரச்னையை தீர்க்கிறது.

முளை கட்டிய கருப்பு உளுந்து, தாய்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

சோயா பயறு

முளை கட்டிய சோயாவை சாப்பிடும் போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வந்தால் சரி செய்கிறது.

முளை கட்டிய சோயாவை நேரடியாக சாப்பிட்டால் அஜீரண தொந்தரவை ஏற்படுத்தும் எனவே வேக வைத்து பயன்படுத்த வேண்டும்.

கொள்ளு

முளை கட்டிய கொள்ளு உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொப்பையைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கிறது. மேலும் கண்பார்வை பலப்படும்.

முளைகட்டிய தானியங்களின் நன்மைகள்

 • முளை கட்டிய தானியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது.
 • இதில் உள்ள வைட்டமின் பி, தோல் புற்றுநோயைத் தடுக்கும். மென்மையான சருமம், மேலும் சருமத்திற்கு புத்துணர்வு தருகிறது.
 • முளை கட்டிய பயிரில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் இவை நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது.
 • இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
 • முளைகட்டிய தானியம் சாப்பிடுவதால் ரத்த சோகையை சரி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *