விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
தேவர்களுக்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒடுக்க சிவன் பார்வதியால் விநாயகர் யானை முகத்தோடும், மனித உடலோடும் படைக்கப்பட்டார். அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரம்மா தந்த கொழுக்கட்டையுடன் சுற்றி வந்த விநாயகனின் பேழைவயிறை கண்ட சந்திரன் சிரித்து அவர் சாபத்தை பெற்று தேய்ந்து மறைந்தான்.
இதை பற்றி இந்திரன் பிரம்மாவிடம் சொல்ல அவர் விநாயகரை சந்திரன் சரணடைந்து ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வரும்) விரதம் ஏற்று வழிபட்டால் தான் சாபம் நீங்கும் என்றும் விநாயகருக்கு உகந்த கொழுக்கட்டை மற்றும் நைவேத்தியங்களை படைக்க சொன்னார். சந்திரனும் அவ்வாறே செய்ய சாபம் நீங்கப் பெற்றான் என்பது புராணம்.
கொழுக்கட்டை, பழங்கள், பாயசம், அப்பம், மோதகம் இவைகளை நைவேத்திய பிரசாதமாக சமர்ப்பிக்கலாம்.
“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா
சர்வ கார்யேஷு சர்வதா”
விளக்கம்
- அழகான வளைவுடைய துதிக்கையுடன் மிகப்பெரிய உடலை உடையவரே (விநாயகா)
- கோடி சூரியனின் பொலிவை உடையவரே என்னுடைய அனைத்து செயல்களும் எந்த தடையுமின்றி எப்போதும் சரிவர நடந்திட எமக்கருள்வாய்!
இதையும் படிக்கலாம் : பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்..!