பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்..!

முழுமுதற் கடவுள் பிள்ளையார். எந்தவொரு செயலைச் செய்வதாக இருந்தாலும், எந்தவொரு கடவுளை வணங்குவதாக இருந்தாலும், முதற்கடவுள் ஆனைமுகனை வணங்கிவிட்டுத்தான் வழிபாட்டைத் தொடங்குவோம்.

மஞ்சளால் விநாயகர் பிடிப்பது

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரியங்கள் யாவிலும் துணைநின்று வெற்றியைத் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.

குங்குமத்தால் விநாயகர் பிடிப்பது

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் அகலும்.குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள்.

புற்று மண்ணினால் விநாயகர் பிடிப்பது

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்கினால், தீராத நோய்களும் தீரும். விவசாயம் தழைக்கும். தனம் தானியம் பெருகும்.

வெல்லத்தில் விநாயகர் பிடிப்பது

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும் வெளியேயும் உள்ள கட்டிகள், கொப்புளம் முதலானவை விரைவில் கரைந்து குணமாகும். ஆரோக்கியத்துடன் வாழச் செய்வார் ஆனைமுகன்.

உப்பினால் விநாயகர் பிடிப்பது

உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும். எதிரிகளையும் எதிர்ப்புகளையும் விரட்டுவார்.

வெள்ளெருக்கில் விநாயகர் பிடிப்பது

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். தீயசக்திகள் அண்டாது காப்பார். நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் மேலோங்கும். ஐஸ்வர்யம் பெருகும்.

விபூதியால் விநாயகர் பிடித்து

விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட  நோய்கள் நீங்கும். உத்தியோக உயர்வும் ஞானமும் கிடைக்கப் பெறலாம்.

சந்தனத்தால் விநாயகர் பிடித்து

சந்தனத்தால் விநாயகர் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறலாம். சந்ததி சிறந்துவிளங்கும்.

சாணத்தால் விநாயகர் பிடித்து

சாணத்தால் விநாயகர் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீடுமனை வாங்கும் யோகம் கிட்டும்.

வாழைப்பழத்தில் விநாயகர் பிடித்து

வாழைப்பழத்தில் விநாயகர் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் நிம்மதி குடிகொள்ளும்.

வெண்ணெயில் விநாயகர் பிடித்து

வெண்ணெயில் விநாயகர் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். ஆபரணச் சேர்க்கை நிகழும்.

சர்க்கரையில் விநாயகர் பிடித்து

சர்க்கரையில் விநாயகர் செய்து வழிபட்டால், சர்க்கரை நோயின் வீரியம் குறையும். இனிமையான தருணங்கள் வீட்டில் எப்போதும் குடியிருக்கும்.

பசுஞ்சாண விநாயகர்

பசுஞ்சாண விநாயகர் நோய்களை நீக்குவார். ஆரோக்கியத்துடன் வாழச் செய்வார்.

கல் விநாயகர்

கல் விநாயகர்- வெற்றியைத் தருவார். எடுத்த காரியங்கள் அனைத்தும் வீரியத்துடன் நடந்தேறும்.

மண்ணால் விநாயகர்

மண்ணால் விநாயகர் செய்து வழிபட்டால், உயர் பதவிகள்  தேடிவரும். கெளரவமும் அந்தஸ்தும் உயரும். தொழில் விருத்தியாகும். லாபம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாம் : 32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி தெரியுமா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *