உடல் எடையை குறைக்க நார்ச்சத்து ரொம்ப முக்கியம். தினமும் நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தோம்னா மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொண்டைக்கடலையை சாப்பிடறதுனால ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
கொண்டைக்கடலையில அதிகமான அளவு நார்ச்சத்து இருக்கு. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவங்க தினமும் ஒரு கைப்பிடி அளவு கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தாங்கன்னா ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கொண்டைக்கடலையில் அதிகமான அளவு புரதச்சத்தும், ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கு. பிரவுன் நிறக் கொண்டைக்கடலைய தினமும் இரவு படுக்கும் முன் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிட்டு வந்தோம்னா செரிமான பிரச்சனை சரியாகிவிடும்.
தினமும் கொண்டைக்கடலையை சாப்பிடறதுனால பழம் மற்றும் காய்கறிகளில் கிடைக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் இந்த கொண்டைக்கடலிலே கிடைக்குது.
கொண்டைக்கடலை சாப்பிடறதுனால உடல் எடை குறையறது மட்டும் இல்லாம இதய நோயையும் கட்டுப்படுத்தும்.
பிரவுன் நிற கொண்டைக்கடலையை தினமும் அரை கப் சாப்பிடறதுனால வயிறு நிரம்புவது மட்டும் இல்லாம நீண்ட நேரம் பசி எடுக்காது. அதனால கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடாமல் உணவில் கட்டுப்பாடுடன் இருக்கலாம்.
இதையும் படிக்கலாம் : முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்