மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்

வைத்தீஸ்வரன் கோவில்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர். தாயார் தையல்நாயகி. அருள்மிகு முத்துகுமாரசுவாமி என முருகன் இங்கு அழைக்கப்படுகிறார்.

மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., சீர்காரிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் வைத்தீஸ்வரன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மற்றொரு நவக்கிரகம், செவ்வாய் இருக்கை ஆகும்.

சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலத்தின் மூலவர் சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் தாயார் பெரியநாயகி, திருநிலைநாயகி.

மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் இடையேயான பிரதான பாதையில் சீர்காழி அமைந்துள்ளது. அருள்மிகு சட்டைநாதசுவாமி ஆலயத்தில் பல அற்புதமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப அம்சங்கள் உள்ளன. தெய்வத்தின் தெய்வீக பாடல்களில் இந்த கோவில் புகழப்படுகின்றது. நான்கு பெரிய தெய்வீக கவிஞர்களில் ஒருவரான சைவ துறவி திருஞானசம்பந்தர் இங்கு சிவன் மற்றும் பார்வதி தெய்வீக அருளால் வழங்கப்பட்டார். ஒவ்வொரு மாதமும் சித்திரை தமிழ் மாதத்தில், திருமுளையால் திருவிழா ஒரு பெரிய முறையில் கொண்டாடப்படுகிறது.

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 47வது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அமிர்தகடேசுவரா். தாயார் அபிராமி தேவி.

மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சீர்காழி–நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 25வது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் உத்வாகநாதர். தாயார் கோகிலா. இறைவன் கல்யாண சுந்தரர் வடிவங் கொண்டு கோகிலாம்பிகையை திருமணஞ் செய்த தலமென்பது ஐதிகம்.

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் மயூரநாதர். தாயார் அபயாம்பிகை. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது நம்பிக்கை. காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று.

தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்

தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில் கடலுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலில் உள்ள மூலவர் மாசிலாமணிநாதர். இறைவி அகிலாண்டேஸ்வரி.

இக்கோயில் திருக்கடையூருக்குத் தென்கிழக்கில் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் அலைகள் இசை பாடுவது போல இருப்பதால் தரங்கம்பாடி என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது ஐதிகம். இக்கோயிலில் உள்ள மூலவர் சுவேதாரண்யேஸ்வரர். தாயார் பிரமவித்யாம்பிகை.

சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம்.

சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம். படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.

திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்

திருநாங்கூருக்குள்ளேயே இருக்கும் கோயில்கள் திருக்காவளம்பாடி, திருஅரிமேய விண்ணகரம், திருவண்புருடோத்தமம், திருச்செம்பொன் செய்கோயில், திருமணிமாடக் கோயில், திருவைகுந்த விண்ணகரம்.

திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள் திருத்தேவனார்த் தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன் பள்ளி என பதினொரு திருப்பதிகள்.

ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்) காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று இரிய அந்த சத்தத்தைக் கேட்ட உடன் திருமங்கையாழ்வார் பிரவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும், திருமங்கையாழ்வாரால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கை.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் 108 வைணவத் தலங்களுள் 26வது திருத்தலம். இத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த தலம். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் உள்ள மூலவர் பரிமள ரங்கநாதர். தாயார் பரிமள ரங்கநாயகி.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் எனும் சிற்றூரில் உள்ளது.

கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்

கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் நவக்கிரங்களில் ஒருவரான கேது தலமாகும். இக்கோயிலில் உள்ள மூலவர்: நாகநாதர், தாயார்: சவுந்தர்யநாயகி.

அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு திருபாற்கடலை கடையும் போது, அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால், மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்த ஒரு அசுரன் அமிர்தத்தை பருகிய அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை திருமாலிடம் கூற, திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், உடல் இரண்டாக பிளவுபட்டது.

அமிர்தம் குடித்த முண்டத்துடன் கூடிய பகுதி கேதுவாகவும், தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது. கேது மனித வாழ்விலும் முழு படைப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குமென நம்பப்படுகிறது.

பூம்புகார்

பூம்புகார் மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி தாலுக்காவில் உள்ளது. இது காவேரிபூம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது.

பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) ஒன்று. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது.

காவிரி ஆறு கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம் “காவிரிப்பூம்பட்டினம்”. ஆறு புகுமிடம் என்பது ‘புகும் ஆறு’ என மருவிப் ‘புகாறு’ ஆகி, மேலும் மருவிப் ‘புகார்’ என நின்றது.

தரங்கம்பாடி

வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையோர வரிசையில் மயிலாடுதுறையின் தென்கிழக்கில் 30 கி.மீ. டேனிஷ் கோட்டை கவர்ச்சிகரமான அம்சமாகும். மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதிகள் உள்ளன.

திருமுல்லைவாசல்

திருமுல்லைவாசல் சீர்காழியின் 14 கி.மீ. கிழக்கே உள்ளது. அதன் அழகிய கடற்கரைக்கு இது மிகவும் பிரபலமானது, இது இயற்கை அழகை முழுமையாகக் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் ஒரு பழங்கால கோயில் உள்ளது. அருள்மிகு முல்லிவனநாதர் இந்த கோயிலின் முக்கிய தெய்வமாகும்.

அனந்தமங்கலம்

மயிலாடுதுறைக்கும் காரைக்காலுக்கும் இடையே கிழக்கு கடற்கரையில், அனந்தமங்கலம் திருக்கடையாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் அனைவருக்கும் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் அமைத்து உள்ளது.

இங்கே ஆஞ்சநேயரின் தெய்வீக சிலை அதன் மூன்று கண்களாலும், பத்து கைகளாலும் தனித்துவமானது. ஆஞ்சநேயரின் விசேஷ வழிபாடு சனிக்கிழமைகளில் மற்றும் அமாவாசை நாட்களில் நடைபெறுகிறது.

கொள்ளிடம் ஆறு

தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறு கொள்ளிடம் ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.

இதையும் படிக்கலாம் : சிவனின் பஞ்சபூதத் தலங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *