பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் இடங்களைக் குறிக்கும்.
இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும், பொருட்களும் பஞ்சபூதங்களில் ஐந்தும் கலந்தோ அல்லது அவற்றுள் சிலவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும்.
ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும் இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.
Contents
பஞ்சபூதத் தலங்கள்
பூதம் |
கோயில் பெயர் | லிங்கத்தின் பெயர் |
இடம் |
நிலம் | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் | பிருத்வி லிங்கம் | காஞ்சிபுரம் |
நெருப்பு | திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் | அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம் | திருவண்ணாமலை |
நீர் | திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில் | அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம் | திருச்சி |
ஆகாயம் | சிதம்பரம் நடராசர் திருக்கோயில் | ஆகாச லிங்கம் | சிதம்பரம் |
காற்று | திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயில் | வாயு லிங்கம் | திருக்காளத்தி |