வெந்தயத்தை நேரடியா சாப்பிடுவதைவிட, முளைகட்டிவிட்டு அதன்பிறகு பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும். முளைகட்டி எடுத்துவிட்டாலே, வெந்தயத்தின் கசப்பு தன்மை நீங்கிவிடும். மாறாக இனிப்பு சுவை வந்துவிடும். அதனால், இதில், லேசாக மிளகுத் தூள், உப்பு சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாலட்களில், சூப்களிலும் பயன்படுத்தலாம். ஊற வைத்த இந்த தண்ணீரை அப்படியே குடிக்கலாம் அல்லது தலைமுடியை அலசுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
முளைகட்டிய வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்
முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜென் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
வெந்தயத்தை 10 மணி நேரம் ஊறவைத்து, அதன் தண்ணீரை வடிகட்டி, ஈரத்துணியால் 10 மணி நேரம் மீண்டும் கட்டி வைக்க வேண்டும். பிறகு, அடிக்கடி தண்ணீரை மட்டும் தெளித்து வந்தாலே போதும் மறுநாள் காலையில் எடுத்தால் முளை கட்டிய வெந்தயம் கிடைத்துவிடும். இதை நேரடியாக கூட சாப்பிடலாம்.
அதிக எடை மற்றும் அதிக தொப்பை உள்ளவர்கள் முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.
வெந்தயம் இயற்கையான குளிர்ச்சி தன்மை கொண்டுள்ளது. இந்த முளைத்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள சூடு தணிந்து வயிற்றுவலி, உஷ்ணத்தால் ஏற்படும் பருக்கள், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
முளைத்த வெந்தயம் தோலில் உள்ள அனைத்து செல்களையும் தூண்டி, அவற்றை அப்படியே வைத்திருக்கும். இது முகப்பரு, கரும்புள்ளிகள், முக சோர்வு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிறந்த சிகிச்சையாக அமைகிறது.
சர்க்கரை நோயாளிகள் வெந்தயக் கீரையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகள் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை முளைப்பது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுத்து ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. எனவே, இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு.
முளைகட்டிய வெந்தயம் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு உடனடிப் பலன் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம் : கருப்பு உளுந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!