கருப்பு உளுந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

கருப்பு உளுந்து தெற்காசியாவை தாயகமாகக் கொண்டது. தெற்காசியாவில் வளர்க்கப்படும் முக்கியமாக பயிர் கருப்பு உளுந்து. தமிழ் சமையலில் தோசை, இட்லி, வடை, உளுந்து களி, அப்பளம், முறுக்கு என அன்றாட உணவுகளில் உளுந்துக்கு முக்கிய பங்குண்டு.

கருப்பு உளுந்தில் இருக்கும் தோலை நீக்குவதால் கிடைப்பதே வெள்ளை உளுந்து. வெள்ளை உளுந்தை காட்டிலும் கருப்பு உளுந்தில் தான் சத்துக்கள் ஏராளம்.

கருப்பு உளுந்து சத்துக்கள்

 • கால்சியம்
 • பாஸ்பரஸ்
 • பொட்டாசியம்
 • இரும்பு
 • நார்ச்சத்து

கருப்பு உளுந்தால் செய்த உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

கருப்பு உளுந்து களி பயன்கள்

சிறுநீரகம்

சிறுநீரகத்தில் கழிவு உப்பு தேங்கி கற்களாக மாறி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். வாரம் ஒருமுறை உளுந்த களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும். சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும்.சிறுநீரை நன்கு பெருக்கி, உடலில் உள்ள அனைத்து கழிவுப் பொருட்களையும் நீக்குகிறது.

ஊட்ட உணவு

கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் அதிக உடல் உழைப்பில் கொண்டவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். இது எளிதில் ஒருவரை சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உதவுகிறது.

நரம்பு கோளாறுகள்

 • உடலின் சரியான இயக்கம் மற்றும் செயல் பாட்டிற்கு நரம்புகளின் செயல் இன்றியமையாதது. போன்ற
 • நரம்புகள் சம்மந்தமான நரம்பு தளர்ச்சி, ஞாபக மறதி, ஹிஸ்டரியா, சிர்சோபீர்னியா, வியாதிகளால் கஷ்டப்படுபவர்கள் அன்றாடம் காலை உணவில் கருப்பு உளுந்து களியை சாப்பிடுவதால் பாதிப்புகள் அனைத்தும் சரியாகிவிடும்.

நீரிழிவு

 • நீரிழிவு நோயாளிக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான அளவில் இருப்பது முக்கியம்.
 • உளுந்தில் உள்ள நார்ச்சத்து நாம் சாப்பிடும்  உணவில் இருக்கும் சத்துக்களை உடலின் சேர்த்து, ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து, நீரிழிவு பாதிப்பு தீவிரமாகாமல் காக்கிறது. நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்து களியை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

தசை பலம்

உடலின் வலிமைக்கு காரணமாக இருப்பது தசைகள் தான். கடினமாக காரியங்கள் செய்வதற்கு உடலில் தசை அடர்த்தி அதிகமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

கருப்பு உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும். உடல் மிகவும் மெலிந்தவர்கள் உளுந்து களியை அவசியம் சாப்பிட வேண்டும்.

ஆண்மை குறைபாடுகள்

 • போதை பழக்கம், அதிக வெப்பமான சூழல்களில் இருப்பதால் சில ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது.
 • கருப்பு உளுந்து ஆண்மை பாதிப்பை சரிசெய்யும் சிறந்த இயற்கை உணவாகும். எனவே வாரம் 4 முறை இந்த கருப்பு உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் ஆண்களின் மலட்டுத்தன்மை நீக்கும்.

கர்ப்ப கால உணவு

கர்ப்பிணிப் பெண்களுக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அளிக்க அதிக உணவை உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய் மற்றும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். குழந்தை பெற்ற தாய்மார்கள் உளுந்து களியை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

இதயம்

கருப்பு உளுந்தில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. உளுந்து களி எடுத்துக் கொண்டால், அதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை சீராக்கி, உடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களின் அழுத்தத்தைக் குறைக்கிறது.

உடல் சூடு தணிய

உடலில் பாதிக்கும் மேற்பட்ட நோய்கள் உடல் வெப்பத்தால் ஏற்படுகின்றன. வேலையில் ஓய்வின்மை, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சுக்கு, வெந்தயம், பசையம் இல்லாத ஏலக்காய் பொடியுடன் கலந்து, வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.

தாது விருத்தியாக

உளுத்தம் பருப்பை உலர்த்தி அரைத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது வளர்ச்சி அதிகரிக்கும்.

விழுந்தால் உளுந்து உண்

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

உக்காந்து கொண்டே அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வாரம் ஒரு முறையாவது உளுந்து கஞ்சி/களி சாப்பிடுங்கள்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

உடல் வலு பெற, கடும் நோயில் இருந்து மீண்டவர்களும், உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம். இவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வச்சிரமாகும்.

இதையும் படிக்கலாம் : உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *