/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ அனுமன் ஜெயந்தி - Thagaval Kalam

அனுமன் ஜெயந்தி

அனுமன் பிறந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். இவ்வளவு திறமைகளை கொண்ட அனுமன் மார்கழி மாதம் அமாவாசை, மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அவதரித்தவர்.

அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் வணங்கிய பலன் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனைத் வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். நன்மைகள் தேடி வரும்.

அனுமன் காயத்ரி மந்திரம்

“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி,

தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்”

அனுமன் பெயர் காரணம்

சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கும் “தாடையும்”, “மன்” என்பதற்கு “பெரிதானது” என்பதால், “ஹனுமன்” என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என பெயர்க் காரணம் உண்டு.

அனுமனுக்கு வேறு பெயர்கள்

தமிழ்நாட்டில் அனுமன், அனுமார், ஆஞ்சநேயர் என்றும். கர்நாடகத்தில் அனுமந்தய்யா என்றும். ஆந்திரத்தில் ஆஞ்சநேயலு, சஞ்சீவய்யா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

மகாராஷ்டிரத்தில் மாருதி, மஹாவீர் என்றும். உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் இடங்களில் பஜ்ரங்பலி என்றும் அழைக்கப்படுகிறார்.

அனுமன் ஜெயந்தி விரதம்

அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி ராம நாமத்தை ஜபித்து விரதம் இருக்க வேண்டும். அருகில் உள்ள ராமர் அல்லது அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை, வெற்றிலை மாலை வைத்து வழிபடவும். வசதிகள் இருந்தால் வடை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வழிபடலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

அன்றைய தினம் வீட்டில் ஆஞ்சநேயரின் படத்தை வைத்து அஷ்டோத்திரம் சொல்லி வெண்ணெய், உளுந்து வடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவற்றைப் படைத்து பூஜை செய்யவும். அன்றைய தினம், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, சுந்தரகாண்டம், அனுமன் காயத்ரி என்று சொல்லி ஸ்ரீராம நாமத்தை வேண்டிக் கொள்ளலாம். ஸ்ரீராமஜெயம் எழுதுவதும் சிறப்பான பலனைத் தரும்.

அனுமன் ஜெயந்தி விரதம் இருந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் நிறைவேறும், வாழ்வு வளம் பெறும்.

அனுமனுக்கு மாலை அணிவிப்பதின் பலன்

  • அனுமனுக்கு துளசி மாலை அணிவிப்பதன் மூலம் ஸ்ரீராமர் நல்ல கல்வியையும் செல்வத்தையும் பெற முடியும்.
  • அனுமனை வெற்றிலையால் அலங்கரிப்பதன் மூலம் நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.
  • வடை மாலை அணிவித்து அனுமனுக்கு தானம் செய்தால் கிரக சக்தி நீங்கி செல்வம் பெறலாம்.
  • அனுமன் மீது வெண்ணெய் ஊற்றினால், வெண்ணெய் உருகும் முன் விரும்பிய செயல் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.
  • அனுமனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்தால் வாழ்க்கையில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
  • அனுமனுக்கு துளசி சாத்தி வழிபடுவதன் மூலம் சனிஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

அனுமன் ஜெயந்தி 2024

தமிழகத்தில் இந்த ஆண்டு மார்கழி மாத அமாவாசை தினமாக ஜனவரி 11 ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 10-ம் தேதி இரவு 08.05 மணி துவங்கி, ஜனவரி 11-ம் தேதி மாலை 06.31 வரை அமாவாசை திதி உள்ளது. அதே நேரம், ஜனவரி 10-ம் தேதி இரவு 07.44 வரை மட்டுமே மூல நட்சத்திரம் உள்ளது. எனவே மார்கழி அமாவாசை தினமே அனுமன் ஜெயந்தி என்பதால், ஜனவரி 11ம் தேதி இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

இதையும் படிக்கலாம் : ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக மாறியது எவ்வாறு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *