வரலக்ஷ்மி விரத நாள் என்பது மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு உகந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆடி – ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், தங்கள் குடும்பத்தின் செழிப்பிற்காகவும் வரலட்சுமி விரதத்தைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல துணை கிடைக்கவும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் இந்த நாளில் பிரார்த்தனை செய்யுங்கள்.
வரலட்சுமி விரதம் என்பது மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைத்து, பூஜை செய்து, லட்சுமி கடாட்சம் என்றென்றும் நம் வீட்டில் இருக்க அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் நாளாகும். இந்த நாளில் மகாலட்சுமியின் சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரிப்பதால், அஷ்டலட்சுமியின் அருளும் நமக்கு கிடைக்கும்.
வரலக்ஷ்மி விரத தினமான இன்று உச்சரிக்க வேண்டிய துதிகளையும் ஸ்லோகங்களையும் இங்கே பதிவிட்டுள்ளோம். இந்த துதிகளை பாடி லட்சுமி தேவியை துதித்து வரலட்சுமியின் அருளை பெற்று சகல செல்வங்களையும் பெற்று மகிழுங்கள்.
வரலட்சுமி விரத ஸ்லோகம்
ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம:
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம:
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம:
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம:
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம:
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம:
ஓம் அமரர்தம் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம:
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம:
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம:
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம:
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம:
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம:
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம:
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம:
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம:ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம:
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம:
மகாலட்சுமி துதி
ஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றி
திருமா மகள் நின் செவ்வி போற்றி
ஒருமா மணியா ஒளிர்வாய் போற்றி
பிரியாது அவனுளம் பேணுவாய் போற்றி
வருமாசு அகற்றுசெம் மணியே போற்றி
- மகாலட்சுமியின் இந்த துதிகளை தினமும் காலை மற்றும் மாலை 9 முறை ஜபிப்பது வீட்டில் செழிப்பை ஏற்படுத்தும்.
- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர ஹோரையின் போது வீட்டில் உள்ள மகாலட்சுமி சிலையின் முன் தீபம் ஏற்றி, இந்த துதியை 27 முறை காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஜபித்து வர தடையில்லா பணவரவு கூடும்.
- பொன், பொருள், ஆபரணம் சேரும். குடும்பத்தில் பணத் தட்டுப்பாடு இருக்காது.
அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்க சொல்லும் மந்திரம்
சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே செளபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
க்ருஹலக்னு்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம:பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:
ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை சரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸூவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம:ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
இதையும் படிக்கலாம் : சகல மங்களம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்