தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தென் சென்னை 3வது தொகுதி ஆகும்.
இந்த தொகுதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் தியாகராயநகர், கோயம்பேடு மார்கெட் போன்ற தமிழகத்தின் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் இந்த தொகுதியில் உள்ளன.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- விருகம்பாக்கம்
- சைதாபேட்டை
- தியாகராய நகர்
- மைலாப்பூர்
- வேளச்சேரி
- சோழிங்கநல்லூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை
| தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
| 16 ஆவது
(2014) |
9,00,950 | 8,94,141 | 313 | 17,95,404 |
| 17 ஆவது
(2019) |
9,61,904 | 9,73,934 | 371 | 19,36,209 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
| ஆண்டு | கட்சி | வென்ற வேட்பாளர் |
| 1957 | இந்திய தேசிய காங்கிரசு | டி. டி. கிருஷ்ணமாச்சாரி |
| 1962 | திமுக | நாஞ்சில் கி. மனோகரன் |
| 1967 | திமுக | பேரறிஞர் அண்ணா |
| 1967 (இடைத்தேர்தல்) | திமுக | முரசொலி மாறன் |
| 1971 | திமுக | முரசொலி மாறன் |
| 1977 | இந்திய தேசிய காங்கிரசு | இரா. வெங்கட்ராமன் |
| 1980 | இந்திய தேசிய காங்கிரசு | இரா. வெங்கட்ராமன் |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | வைஜயந்திமாலா பாலி |
| 1989 | இந்திய தேசிய காங்கிரசு | வைஜயந்திமாலா பாலி |
| 1991 | அதிமுக | ஆர். ஸ்ரீதரன் |
| 1996 | திமுக | த. ரா. பாலு |
| 1998 | திமுக | த. ரா. பாலு |
| 1999 | திமுக | த. ரா. பாலு |
| 2004 | திமுக | த. ரா. பாலு |
| 2009 | அதிமுக | சி. ராஜேந்திரன் |
| 2014 | அதிமுக | ஜே. ஜெயவர்த்தன் |
| 2019 | திமுக | தமிழச்சி தங்கப்பாண்டியன் |
| 2024 | திமுக | தமிழச்சி தங்கப்பாண்டியன் |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
தி.மு.க வேட்பாளர் த.இரா. பாலு வெற்றி பெற்றார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
| திமுக | த.இரா. பாலு | 5,64,578 |
| அதிமுக | பதர் சயீத் | 3,43,838 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
அ.தி.மு.க வேட்பாளர் சி. இராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
| அதிமுக | சி. இராஜேந்திரன் | 3,08,567 |
| திமுக | பாரதி | 2,75,632 |
| தேமுதிக | வி. கோபிநாத் | 67,291 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் ஜே. ஜெயவர்த்தன் வெற்றி பெற்றார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
| அதிமுக | மருத்துவர் ஜே. ஜெயவர்த்தன் | 4,38,404 |
| திமுக | டி. கே. எஸ். இளங்கோவன் | 3,01,779 |
| பாஜக | இல. கணேசன் | 2,56,786 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
| திமுக | தமிழச்சி தங்கப்பாண்டியன் | 5,64,872 |
| அதிமுக | மருத்துவர் ஜே. ஜெயவர்த்தன் | 3,02,649 |
| மக்கள் நீதி மய்யம் | ஆர். ரங்கராஜன் (இ.ஆ.ப – ஓய்வு) | 1,35,465 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| திமுக | தமிழச்சி தங்கப்பாண்டியன் | 5,16,628 |
| பாஜக | தமிழிசை சௌந்தரராஜன் | 2,90,683 |
| அதிமுக | ஜெ. ஜெயவர்த்தன் | 1,72,491 |
இதையும் படிக்கலாம் : மத்திய சென்னை மக்களவைத் தொகுதி..!