மத்திய சென்னை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மத்திய சென்னை 4வது தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் பரப்பளவில் சிறய தொகுதி இதுவாகும்.

சென்னையின் முக்கிய இடங்களான சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போன்ற பகுதிகள் அடங்கியது தான் மத்திய சென்னை.

மத்திய சென்னையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக, 7 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், அதிமுக மற்றும் ஜனதா கட்சி தலா 1 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த தொகுதியை பொருத்தவரை இது திமுகவின் கோட்டை என்றே கூறப்படுகிறது.

திமுகவின் முக்கிய தலைவர்களான கலாநிதி, முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி.

சட்டமன்ற தொகுதிகள்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • வில்லிவாக்கம்
  • எழும்பூர் (தனி)
  • துறைமுகம்
  • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
  • ஆயிரம் விளக்கு
  • அண்ணா நகர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,65,041 6,62,377 252 13,27,670
17 ஆவது

(2019)

6,53,358 6,62,925 320 13,16,603

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1977 நிறுவன காங்கிரசு பா. ராமச்சந்திரன்
1980 திமுக ஏ. கலாநிதி
1984 திமுக ஏ. கலாநிதி
1989 இந்திய தேசிய காங்கிரசு இரா. அன்பரசு
1991 இந்திய தேசிய காங்கிரசு இரா. அன்பரசு
1996 திமுக முரசொலி மாறன்
1998 திமுக முரசொலி மாறன்
1999 திமுக முரசொலி மாறன்
2004 திமுக தயாநிதி மாறன்
2009 திமுக தயாநிதி மாறன்
2014 அதிமுக எஸ். ஆர். விஜயகுமார்
2019 திமுக தயாநிதி மாறன்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக தயாநிதி மாறன் 3,16,329
அதிமுக பாலகங்கா 1,82,151

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக தயாநிதி மாறன் 2,85,783
அதிமுக முகமது அலி ஜின்னா 2,52,329
தேமுதிக வி. வி. இராமகிருட்டிணன் 38,959

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் விஜயகுமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக விஜயகுமார் 3,33,296
திமுக தயாநிதி மாறன் 2,87,455
தே.மு.தி.க ரவீந்திரன் 1,14,798

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக தயாநிதி மாறன் 4,48,911
பாட்டாளி மக்கள் கட்சி சாம் பவுல் 1,47,391
மக்கள் நீதி மய்யம் கமீலா நாசர் 92,249

இதையும் படிக்கலாம் : ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *