தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழகத்தில் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலந்தூர் பகுதியையும் சென்னை புறநகர் பகுதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட தொகுதி ஸ்ரீபெரும்புதூர். கார் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள தொகுதி இது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.
சட்டமன்ற தொகுதிகள்
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- மதுரவாயல்
- அம்பத்தூர்
- ஆலந்தூர்
- திருப்பெரும்புதூர்
- பல்லாவரம்
- தாம்பரம்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
16 ஆவது
(2014) |
9,82,501 | 9,63,204 | 264 | 19,45,969 |
17 ஆவது
(2019) |
11,02,231 | 11,08,288 | 332 | 22,10,851 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1967 | திமுக | சிவசங்கரன் |
1971 | திமுக | டி.எஸ். லட்சுமணன் |
1977 | அதிமுக | சீராளன் ஜெகன்னாதன் |
1980 | திமுக | நாகரத்தினம் |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | மரகதம் சந்திரசேகர் |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | மரகதம் சந்திரசேகர் |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | மரகதம் சந்திரசேகர் |
1996 | திமுக | நாகரத்தினம் |
1998 | அதிமுக | டாக்டர் வேணுகோபால் |
1999 | திமுக | அ. கிருட்டிணசாமி |
2004 | திமுக | அ. கிருட்டிணசாமி |
2009 | திமுக | த. ரா. பாலு |
2014 | அதிமுக | க. நா. இராமச்சந்திரன் |
2019 | திமுக | த. ரா. பாலு |
2024 | திமுக | த. ரா. பாலு |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
தி.மு.க வேட்பாளர் அ. கிருட்டிணசாமி வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
திமுக | அ. கிருட்டிணசாமி | 5,17,617 |
அதிமுக | டாக்டர் வேணுகோபால் | 2,82,271 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் த. ரா. பாலு வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
திமுக | த. ரா. பாலு | 3,52,641 |
பாட்டாளி மக்கள் கட்சி | ஏ. கே. மூர்த்தி | 3,27,605 |
தேமுதிக | அருண் சுப்பரமணியன் | 84,530 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் க. நா. இராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
அதிமுக | க. நா. இராமச்சந்திரன் | 5,45,820 |
திமுக | எஸ். ஜெகத்ரட்சகன் | 4,43,174 |
மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | மாசிலாமணி | 1,87,094 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் த. ரா. பாலு வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
திமுக | த. ரா. பாலு | 7,93,281 |
பாட்டாளி மக்கள் கட்சி | ஏ. வைத்திலிங்கம் | 2,85,326 |
மக்கள் நீதி மய்யம் | எம். சிறீதர் | 1,35,525 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் த. ரா. பாலு வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | த. ரா. பாலு | 7,58,611 |
அதிமுக | பிரேம் குமார் | 2,71,582 |
தமாகா | வி.என்.வேணுகோபால் | 2,10,110 |
இதையும் படிக்கலாம் : காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி