காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் காஞ்சிபுரம் 6வது தொகுதி ஆகும். இந்தியாவின் பாலாற்றின் கரையில் காஞ்சிபுரம் அமைந்துள்ளது. முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்றாக கருதப்படும் காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன.

2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு பொதுத்தொகுதியாக இருந்த செங்கல்பட்டு தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதி சென்னைக்கு அருகில் உள்ளதால் அதன் தாக்கம் அதிகம். இந்த தொகுதியை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக நேரடியாக களம் கண்டு வரும் தொகுதியாகவே இருந்துள்ளது.

சட்டமன்ற தொகுதிகள்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • செங்கல்பட்டு
  • திருப்போரூர்
  • செய்யூர் (தனி)
  • மதுராந்தகம்
  • உத்திரமேரூர்
  • காஞ்சிபுரம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

7,36,808 7,42,874 174 14,79,856
17 ஆவது

(2019)

7,94,839 8,24,316 163 16,19,318
18 ஆவது

(2024)

6,48,934 6,84,430 183 13,33,547

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 காமன்வீல் கட்சி ஏ. கிருஷ்ணசாமி
2009 இந்திய தேசிய காங்கிரசு பி. விஸ்வநாதன்
2014 அதிமுக கே. மரகதம்
2019 திமுக க. செல்வம்
2024 திமுக க. செல்வம்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் பி. விஸ்வநாதன் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
இந்திய தேசிய காங்கிரசு பி. விஸ்வநாதன் 3,30,237
அதிமுக இ. இராமகிருட்டிணன் 3,17,134
தேமுதிக டி. தமிழ்வேந்தன் 1,03,560

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் கே. மரகதம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக கே. மரகதம் 4,99,395
திமுக ஜி. செல்வம் 3,52,529
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மல்லை சத்யா 2,07,080

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் ஜி. செல்வம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஜி. செல்வம் 6,84,004
அதிமுக கே. மரகதம் 3,97,372
நாம் தமிழர் கட்சி சிவரஞ்சினி 62,771

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் ஜி. செல்வம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஜி. செல்வம் 5,86,044
அதிமுக பெரும்பாக்கம் ராசசேகர் 3,64,571
பாமக ஜோதி வெங்கடேசன் 1,64,931

இதையும் படிக்கலாம் : அரக்கோணம் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *