அரக்கோணம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் அரக்கோணம் 7வது தொகுதி ஆகும். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதிகளுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி தொகுதியை இணைத்து அரக்கோணம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

கிராமப்புற மக்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் பாலாறு மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. ஆறு வறண்டு போனதால் விவசாயம் பொய்த்து போனது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில தொழில்கள் மட்டுமே உள்ளன. இப்பகுதியின் மக்கள்தொகையில் பெரும் எண்ணிக்கையானது, வேலை வாய்ப்புகளை தேடி, அருகிலுள்ள பெரிய நகரமான சென்னைக்கு, தொழிலாளர்களாக செல்கின்றனர்.

சட்டமன்ற தொகுதிகள்

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • திருத்தணி
  • அரக்கோணம் (தனி)
  • சோளிங்கர்
  • காட்பாடி
  • இராணிப்பேட்டை
  • ஆற்காடு

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,88,587 7,07,057 42 13,95,686
17 ஆவது

(2019)

7,24,688 7,55,199 74 14,79,961

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1977 இந்திய தேசிய காங்கிரசு ஓ. வி. அழகேசன்
1980 இந்திய தேசிய காங்கிரசு ஏ. எம். வேலு
1984 இந்திய தேசிய காங்கிரசு ஆர். ஜீவரத்தினம்
1989 இந்திய தேசிய காங்கிரசு ஆர். ஜீவரத்தினம்
1991 இந்திய தேசிய காங்கிரசு ஆர். ஜீவரத்தினம்
1996 தமிழ் மாநில காங்கிரசு ஏ. எம். வேலு
1998 அதிமுக சி. கோபால்
1999 திமுக எஸ். ஜெகத்ரட்சகன்
2004 பாட்டாளி மக்கள் கட்சி அர. வேலு
2009 திமுக எஸ். ஜெகத்ரட்சகன்
2014 அதிமுக ஜி. ஹரி
2019 திமுக எஸ். ஜெகத்ரட்சகன்
2024 திமுக எஸ். ஜெகத்ரட்சகன்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக எஸ். ஜெகத்ரட்சகன் 4,15,041
பாட்டாளி மக்கள் கட்சி அர. வேலு 3,05,245
தேமுதிக எசு. சங்கர் 82,038

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் ஜி. ஹரி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக ஜி. ஹரி 4,93,534
திமுக என். ஆர். இளங்கோ 2,52,768
பாட்டாளி மக்கள் கட்சி அர. வேலு 2,33,762

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக எஸ். ஜெகத்ரட்சகன் 6,72,190
பாட்டாளி மக்கள் கட்சி ஏ. கே. மூர்த்தி 3,43,234
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என். ஜி‌. பார்த்திபன் 66,826

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக எஸ். ஜெகத்ரட்சகன் 5,63,216
அதிமுக ஏ. எல். விசயன் 2,56,657
பாமக கே. பாலு 2,02,325

இதையும் படிக்கலாம் : வேலூர் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *