18 சித்தர்கள் பல்வேறு மூலிகைகளை நமக்கு அளித்தனர். தீராத நோய்களைக் குணப்படுத்தும் குண்டலினி, யோகம் முதலிய கலைகளிலும் அவர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்.
அவர்கள் குலம் தழைக்க பல வித மூலிகை குறிப்புகளை பிறருக்கு உபதேசித்து ஓலைகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். கடவுளின் பக்தர்களான இவர்கள் சதுரகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.
நீண்ட நாட்கள் வாழவைக்கும் இளமை மூலிகைகளை கண்டுபிடித்தனர், இந்த மூலிகைகளை உட்கொள்வதன் மூலம், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர்.
அவர்கள் மறைந்து ஜீவ சமாதியில் இருந்தும் அவரை நம்பும் பக்தர்களுக்கு சாமர்த்தியமாக உதவி செய்யும் சித்தர்கள் ஏராளம். எண்ணற்ற ஞானிகளும், சித்தர்களும் இருந்தாலும், 18 சித்தர்கள் மட்டுமே புகழ் பெற்றவர்கள்.
சித்தர்கள் பிறந்ததிலிருந்து எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று பார்ப்போம்.
1. பதஞ்சலி முனிவர்
பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார். 5 யுகம் 7 நாட்கள் உயிருடன் இருந்தார். ராமேஸ்வரத்தில் இவர் சமாதியடைந்தார்.
2. அகத்திய முனிவர்
அகத்திய முனிவர் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் 4 யுகம் 48 நாட்கள் வாழ்ந்தார். சமாதியடைந்த இடம் திருவனந்தபுரம்.
3. போகர்
போகர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் 300 ஆண்டுகள் 18 நாட்கள் வாழ்ந்தார். ஆவினன்குடியில் இவர் சமாதியடைந்தார்.
4. கமலமுனி
கமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் 4000 ஆண்டுகள் மற்றும் 48 நாட்கள் வாழ்ந்தார். சமாதியடைந்த இடம் திருவாரூர்.
5. திருமூலர்
திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் 3000 ஆண்டுகள் 13 நாட்கள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் இவர் சமாதியடைந்தார்.
6. குதம்பை சித்தர்
குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் 1800 ஆண்டுகள் 16 நாட்கள் வாழ்ந்தார். மாயவரத்தில் இவர் சமாதியடைந்தார்.
7. கோரக்கர்
கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் 880 ஆண்டுகள் 11 நாட்கள் வாழ்ந்தார். அவர் பேரூரில் சமாதியடைந்தார்.
8. தன்வந்திரி
தன்வந்திரி ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 800 ஆண்டுகள் 32 நாட்கள் வாழ்ந்தார். வைத்தீஸ்வரன் கோவிலில் இவர் சமாதியடைந்தார்.
9. சுந்தரானந்தர்
சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 800 ஆண்டுகள் 28 நாட்கள் வாழ்ந்தார். மதுரையில் இவர் சமாதியடைந்தார்.
10. கொங்கணர்
கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 800 ஆண்டுகள் 16 நாட்கள் வாழ்ந்தார். திருப்பதியில் இவர் சமாதியடைந்தார்.
11. சட்டமுனி
சட்டமுனி ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 800 ஆண்டுகள் 14 நாட்கள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் இவர் சமாதியடைந்தார்.
12. வான்மீகர்
வான்மீகர் புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 700 ஆண்டுகள் 32 நாட்கள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் இவர் சமாதியடைந்தார்.
13. ராமதேவர்
ராமதேவர் மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 700 ஆண்டுகள் 06 நாட்கள் வாழ்ந்தார். அழகர்மலையில் இவர் சமாதியடைந்தார்.
14. நந்தீசுவரர்
நந்தீசுவரர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 700 ஆண்டுகள் 03 நாட்கள் வாழ்ந்தார். காசியில் இவர் சமாதியடைந்தார்.
15. இடைக்காடர்
இடைக்காடர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 600 ஆண்டுகள் 18 நாட்கள் வாழ்ந்தார். திருவண்ணாமலையில் இவர் சமாதியடைந்தார்.
16. மச்சமுனி
மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 300 ஆண்டுகள் 62 நாட்கள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் இவர் சமாதியடைந்தார்.
17. கருவூரார்
கருவூரார் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 300 ஆண்டுகள் 42 நாட்கள் வாழ்ந்தார். கரூரில் இவர் சமாதியடைந்தார்.
18. பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 123 ஆண்டுகள் 14 நாட்கள் வாழ்ந்தார். சங்கரன்கோவிலில் இவர் சமாதியடைந்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : தானங்களும் அதன் பலன்களும்..!