தானங்களும் அதன் பலன்களும்..!

நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது.

பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.  அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். – வள்ளலார்.

பல்வேறு பாவங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாவங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன் ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன.

எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது. அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் வரும். ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.

ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக தானங்களில் பல வகை உண்டு. அதே போல நாம் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. ஆனால் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை. அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் தானம் செய்வது மிக நன்று.

தானங்களும் அதன் பலன்களும்

 1. மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.
 2. அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
 3. அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
 4. ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.
 5. எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
 6. காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
 7. காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
 8. குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
 9. தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.
 10. நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
 11. தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.
 12. கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
 13. பால் தானம் – சவுபாக்கியம்
 14. பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி
 15. தயிர் சாதம் / பால் சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.
 16. தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.
 17. வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
 18. சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்
 19. பூமி தானம் – இகபரசுகங்கள்
 20. வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி
 21. கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
 22. திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்
 23. குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
 24. சந்தனக்கட்டை தானம் – புகழ்
 25. விதை தானம் – வம்ச விருத்தியை தரும்
 26. மாங்கல்ய சரடு தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
 27. பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.
 28. தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
 29. தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள். அத்தகைய தானங்கள் பல வகைப்படும்.

கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

 • அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.
 • கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.
 • பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
 • குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.
 • தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
 • வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
 • ஆலயத்துக்கு யானை தானம் – இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.
 • குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.
 • நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் – வாயுலோகத்தில் வாழ்வார்.
 • தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.
 • பயன் கருதாது தானம் – மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.
 • பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.
 • தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் – நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.
 • சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.
 • தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.
 • நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.
 • தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பெறுவோம்.

இதையும் படிக்கலாம் : செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *