மகாவிஷ்ணுவின் அருளைப் பெற ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்பது விஷ்ணு பகவானை வழிபடும் நாளாகும். நமது விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள சந்தன மண்டபத்தில் இன்று நம் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏகாதசி விரதம்
ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம் என்பதை விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. பதினோராவது திதிகள் ஏகாதசி, வளர்பிறை மற்றும் தேய்பிறை, ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள். எனவே ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வருகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள் மற்றும் சிறப்பு நன்மைகள் உள்ளன.
அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து, விஷ்ணு பகவானை வணங்குங்கள். ஒரு நாள் முழுவதுமாக விரதம் இருந்து மறுநாள் காலையில் பிரார்த்தனை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும் போது திருமாலின் நாமத்தை ஜபிக்கவும்.
இந்நாளில் எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் இருந்தால் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாசுரத்தை சொல்லி வழிபடுங்கள்.
“துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!”
இதையும் படிக்கலாம் : 24 ஏகாதசிகளும் அதன் பயன்களும்..!