24 ஏகாதசிகளும் அதன் பயன்களும்..!

ஒவ்வொரு மாதமும் சுக்கில பட்சம் என்ற வளர்பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி. மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். ஏகாதசி விரதம் இருப்போருக்கு திருமாலே பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை.

ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுவோருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை இறைவன் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாக சொல்லப்படுகிறது.

  • உற்பத்தி (ஏகாதசி) – மார்கழி – க்ருஷ்ண (பக்‌ஷம்) – சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
  • மோட்ச – மார்கழி – சுக்ல – வைகுண்டம் கிடைக்கும்
  • ஸபலா – தை – க்ருஷ்ண – பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)
  • புத்ரதா – தை – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)
  • ஷட்திலா – மாசி – க்ருஷ்ண – அன்ன தானத்திற்கு ஏற்றது
  • ஜயா – மாசி – சுக்ல – பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)
  • விஜயா – பங்குனி – க்ருஷ்ண – ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்
  • ஆமலதீ – பங்குனி – சுக்ல – கோதானம் செய்ய ஏற்றது
  • பாப மோசனிகா – சித்திரை – க்ருஷ்ண – பாபங்கள் அகலும்
  • காமதா – சித்திரை – சுக்ல – நினைத்த காரியம் நடக்கும்
  • வருதிந் – வைகாசி – க்ருஷ்ண – ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)
  • மோஹினி – வைகாசி – சுக்ல – பாவம் நீங்கும்
  • அபார – ஆனி – க்ருஷ்ண – குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்
  • நிர்ஜலா (பீம) – ஆனி – சுக்ல – எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது – பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)
  • யோகினீ – ஆடி – க்ருஷ்ண – நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)
  • சயிநீ – ஆடி – சுக்ல – தெய்வ சிந்தனை அதிகமாகும் – திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)
  • சாமிகா – ஆவணி – க்ருஷ்ண – விருப்பங்கள் நிறைவேறும்
  • புத்ரஜா – ஆவணி – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும்
  • அஜா – புரட்டாசி – க்ருஷ்ண – இழந்ததைப் பெறலாம் – அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்
  • பத்மநாபா – புரட்டாசி – சுக்ல – பஞ்சம் நீங்கும்
  • இந்திரா – ப்பசி – க்ருஷ்ண – பித்ருக்கள் நற்கதி பெறுவர்
  • பாபாங்குசா – ப்பசி – சுக்ல – கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்
  • ரமா – கார்த்திகை – க்ருஷ்ண – உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்
  • ப்ரபோதின் – கார்த்திகை – சுக்ல – பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்
  • கமலா – (சில வருடங்களில் மட்டும்) – மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

ஏகாதசி என்றால் என்ன ?

ஏகாதசி மாதத்தின் இரண்டு சந்திர சுழற்சிகளான கிருட்ண பட்சம் & சுக்கில பட்சத்தின் பதினொன்றாவது நாளில் நடைபெறுகிறது. ஆன்மீக ரீதியாக, ஏகாதசி பதினொரு புலன்களைக் குறிக்கிறது, இது ஐந்து புலன்கள், ஐந்து செயல் உறுப்புகள் மற்றும் ஒரு மனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. பதினொரு புலன்களைக் கட்டுப்படுத்தி, அனுமதிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்வதன் மூலமும், மற்றவர்களைத் தவிர்ப்பதன் மூலமும் மக்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

இதையும் படிக்கலாம் : வைகுண்ட ஏகாதசி விரத முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *