தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஆரணி மக்களவைத் தொகுதி 12வது தொகுதி ஆகும். வந்தவாசி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நீக்கப்பட்டு, அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து, செய்யார் தொகுதியும், வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆரணி தொகுதிகளை எடுத்தும் மற்றும் மயிலம் புதிய தொகுதியை உருவாக்கியும் ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்
ஆரணி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- போளூர்
- ஆரணி
- செய்யார்
- வந்தவாசி (தனி)
- செஞ்சி
- மயிலம்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,14,410 | 7,31,293 | 78 | 14,45,781 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி | வென்ற வேட்பாளர் |
கூட்டணி |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | எம். கிருஷ்ணசாமி | திமுக |
2014 | அதிமுக | வி. ஏழுமலை | தனித்து போட்டி |
2019 | இந்திய தேசிய காங்கிரசு | எம். கே. விஷ்ணு பிரசாத் | திமுக |
2024 | திமுக | தரணிவேந்தன் | – |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எம். கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | எம். கிருஷ்ணசாமி | 3,96,728 |
அதிமுக | என். சுப்பிரமணியன் | 2,89,898 |
தேமுதிக | இரா. மோகனம் | 1,05,729 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் வி. ஏழுமலை வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
அதிமுக | வி. ஏழுமலை | 5,02,721 |
திமுக | ஆர். சிவானந்தம் | 2,58,877 |
பாட்டாளி மக்கள் கட்சி | ஏ. கே. மூர்த்தி | 2,53,332 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | எம். கே. விஷ்ணு பிரசாத் | 6,17,760 |
அதிமுக | வி. ஏழுமலை | 3,86,954 |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | செந்தமிழன் ஜி | 46,383 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் தரணிவேந்தன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | தரணிவேந்தன் | 5,00,099 |
அதிமுக | சி. வி. கசேந்திரன் | 2,91,333 |
பாமக | முனைவர். அ. கணேசு குமார் | 2,36,571 |
இதையும் படிக்கலாம் : விழுப்புரம் மக்களவைத் தொகுதி