விழுப்புரம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி 13வது தொகுதி ஆகும். இந்த தொகுதி பெருமளவு விவசாயப் பகுதிகளை கொண்டது. இப்பகுதியில் நெல், கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறும். தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகள் இவை. கரும்பு விவசாயம் நடைபெறுவதால், அதிகமான கரும்பு ஆலைகள் உள்ளன.

திண்டிவனம் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • திண்டிவனம் (தனி)
  • வானூர் (தனி)
  • விழுப்புரம்
  • விக்கிரவாண்டி
  • திருக்கோயிலூர்
  • உளுந்தூர்பேட்டை

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,20,770 7,22,481 185 14,43,436
18 ஆவது

(2024)

8,24,569 8,44,795 213 16,69,577

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

 ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

2009 அதிமுக மு. ஆனந்தன்
2014 அதிமுக எஸ். ராஜேந்திரன்
2019 திமுக ரவிக்குமார்
2024 விசிக து. இரவிக்குமார்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

அ.தி.மு.க வேட்பாளர் மு. ஆனந்தன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக மு. ஆனந்தன் 3,06,826
விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவாமிதுரை 3,04,029
தேமுதிக பி. எம். கணபதி 1,27,476

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் எஸ். ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக எஸ். ராஜேந்திரன் 4,82,704
திமுக டாக்டர்.கோ.முத்தையன் 2,89,337
தேமுதிக கே. உமா சங்கர் 2,09,663

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ரவிக்குமார் 5,59,585
பாட்டாளி மக்கள் கட்சி வடிவேல் இராவணன் 4,31,517
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கணபதி 58,019

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

வி.சி.க வேட்பாளர் து. இரவிக்குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

விசிக து. இரவிக்குமார் 4,77,033
அதிமுக செ. பாக்யராசு 4,06,330
பாமக முரளி சங்கர் 1,81,882

இதையும் படிக்கலாம் : கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *