தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நாமக்கல் மக்களவைத் தொகுதி 16வது தொகுதி ஆகும். இராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தொகுதியை நீக்கி விட்டு புதிதாக நாமக்கல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
காவிரி ஆற்றங்கரையில் உள்ள பரமத்திவேலூரில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மங்கலம் வரை இத்தொகுதி நீண்டுள்ளது.
விவசாயம் முக்கிய தொழில். இப்பகுதி காவிரி ஆற்றின் கரையை ஒட்டிய பகுதி என்பதால், நெல், கரும்பு பயிரிடும் பாரம்பரியமிக்க பகுதியாகும். விவசாயத்தை தவிர கோழிப்பண்ணை முக்கிய தொழில். முட்டை, கோழிக்கறி அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர நாமக்கல், திருச்செங்கோடு, சங்கரகிரி மாவட்டங்களில் அதிகளவில் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் இருந்து வரும் லாரிகள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் சரக்கு போக்குவரத்தில் லாரிகள் கணிசமான பங்களிப்பை அளித்து வருகின்றன.
சட்டமன்ற தொகுதிகள்
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- சங்ககிரி
- இராசிபுரம் (தனி)
- சேந்தமங்கலம் (தனி)
- நாமக்கல்
- பரமத்தி-வேலூர்
- திருச்செங்கோடு
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது
(2014) |
6,49,577 | 6,55,827 | 71 | 13,05,475 |
17 ஆவது
(2019) |
6,95,247 | 7,71,888 | 111 | 14,13,246 |
18 ஆவது
(2024) |
6,93,728 | 7,38,383 | 196 | 14,32,307 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி | வென்ற வேட்பாளர் |
கூட்டணி |
2009 | திமுக | செ. காந்திச்செல்வன் | – |
2014 | திமுக | பி. ஆர். சுந்தரம் | – |
2019 | (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்) | ஏ. கே. பி. சின்ராஜ் | திமுக |
2024 | கொமதேக (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்) | மாதேசுவரன் | திமுக |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் செ. காந்திச்செல்வன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | செ. காந்திச்செல்வன் | 3,71,476 |
அதிமுக | வைரம் தமிழரசி | 2,69,045 |
தேமுதிக | என். மகேசுவரன் | 79,420 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் பி. ஆர். சுந்தரம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | பி. ஆர். சுந்தரம் | 5,63,272 |
திமுக | செ. காந்திச்செல்வன் | 2,68,898 |
தேமுதிக | எஸ். கே. வேல் | 1,46,882 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் ஏ. கே. பி. சின்ராஜ் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | ஏ. கே. பி. சின்ராஜ் | 6,26,293 |
அதிமுக | காளியப்பன் | 3,61,142 |
நாம் தமிழர் கட்சி | பாஸ்கர் | 38,531 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் மாதேசுவரன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | மாதேசுவரன் | 4,62,036 |
அதிமுக | எசு. தமிழ்மணி | 4,32,924 |
பாஜக | கே. பி. இராமலிங்க | 1,04,690 |
இதையும் படிக்கலாம் : ஈரோடு மக்களவைத் தொகுதி