ஈரோடு மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஈரோடு மக்களவைத் தொகுதி 17வது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்டது ஈரோடு மக்களவைத் தொகுதி. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும், ஈரோடு மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

காவிரி கரையோரம் அமைந்துள்ள மேற்குத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று ஈரோடு. ஈரோட்டை அண்மித்துள்ள கோவை மற்றும் திருப்பூர் தொகுதிகளைவிடவும் ஒப்பீட்டளவில் கிராமியத் தொழிற்சாலைகளை பரவலாகக் கொண்டது ஈரோடு தொகுதி.

சட்டமன்ற தொகுதிகள்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • குமாரபாளையம்
  • ஈரோடு கிழக்கு
  • ஈரோடு மேற்கு
  • மொடக்குறிச்சி
  • தாராபுரம் (தனி)
  • காங்கேயம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,444,34 6,51,924 56 12,96,414
17 ஆவது

(2019)

7,15,617 7,46,355 104 14,62,076
18 ஆவது

(2024)

9,46,965 10,07,576 170 19,54,711

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு கட்சி வென்ற வேட்பாளர்
2009 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அ. கணேசமூர்த்தி
2014 அதிமுக செ. செல்வகுமார சின்னையன்
2019 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அ. கணேசமூர்த்தி
2024 திமுக கே. இ. பிரகாசு

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

ம.தி.மு.க வேட்பாளர் அ. கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அ. கணேசமூர்த்தி 2,84,148
இந்திய தேசிய காங்கிரசு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் 2,34,812
கொமுபே சி. பாலசுப்பரமணியம் 1,06,604

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் எஸ். செல்வக்குமார் சின்னையன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக எஸ். செல்வக்குமார் சின்னையன் 4,66,995
மதிமுக அ. கணேசமூர்த்தி 2,55,432
திமுக எச். பவித்திரவள்ளி 2,17,260

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் அ. கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக அ. கணேசமூர்த்தி 5,63,591
அதிமுக மணிமாறன் 3,52,973
மக்கள் நீதி மய்யம் சரவணக்குமார் 47,719

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் கே. இ. பிரகாசு வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கே. இ. பிரகாசு 5,62,339
அதிமுக அசோக்குமார் 3,25,773
நாம் தமிழர் கட்சி கார்மேகம் 82,796

இதையும் படிக்கலாம் : திருப்பூர் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *