தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஈரோடு மக்களவைத் தொகுதி 17வது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்டது ஈரோடு மக்களவைத் தொகுதி. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும், ஈரோடு மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
காவிரி கரையோரம் அமைந்துள்ள மேற்குத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று ஈரோடு. ஈரோட்டை அண்மித்துள்ள கோவை மற்றும் திருப்பூர் தொகுதிகளைவிடவும் ஒப்பீட்டளவில் கிராமியத் தொழிற்சாலைகளை பரவலாகக் கொண்டது ஈரோடு தொகுதி.
சட்டமன்ற தொகுதிகள்
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- குமாரபாளையம்
- ஈரோடு கிழக்கு
- ஈரோடு மேற்கு
- மொடக்குறிச்சி
- தாராபுரம் (தனி)
- காங்கேயம்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது (2014) |
6,444,34 | 6,51,924 | 56 | 12,96,414 |
17 ஆவது
(2019) |
7,15,617 | 7,46,355 | 104 | 14,62,076 |
18 ஆவது
(2024) |
9,46,965 | 10,07,576 | 170 | 19,54,711 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு | கட்சி | வென்ற வேட்பாளர் |
2009 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | அ. கணேசமூர்த்தி |
2014 | அதிமுக | செ. செல்வகுமார சின்னையன் |
2019 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | அ. கணேசமூர்த்தி |
2024 | திமுக | கே. இ. பிரகாசு |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
ம.தி.மு.க வேட்பாளர் அ. கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | அ. கணேசமூர்த்தி | 2,84,148 |
இந்திய தேசிய காங்கிரசு | ஈ.வெ.கி.ச.இளங்கோவன் | 2,34,812 |
கொமுபே | சி. பாலசுப்பரமணியம் | 1,06,604 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் எஸ். செல்வக்குமார் சின்னையன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | எஸ். செல்வக்குமார் சின்னையன் | 4,66,995 |
மதிமுக | அ. கணேசமூர்த்தி | 2,55,432 |
திமுக | எச். பவித்திரவள்ளி | 2,17,260 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் அ. கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
திமுக | அ. கணேசமூர்த்தி | 5,63,591 |
அதிமுக | மணிமாறன் | 3,52,973 |
மக்கள் நீதி மய்யம் | சரவணக்குமார் | 47,719 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் கே. இ. பிரகாசு வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கே. இ. பிரகாசு | 5,62,339 |
அதிமுக | அசோக்குமார் | 3,25,773 |
நாம் தமிழர் கட்சி | கார்மேகம் | 82,796 |
இதையும் படிக்கலாம் : திருப்பூர் மக்களவைத் தொகுதி