தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருப்பூர் மக்களவைத் தொகுதி 18வது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி திருப்பூர்.
தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ள மேற்குத் தமிழகத்தின் முக்கியமான தொரு நகரமான திருப்பூர், தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சட்டமன்ற தொகுதிகள்
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- பெருந்துறை
- பவானி
- அந்தியூர்
- கோபிசெட்டிபாளையம்
- திருப்பூர் வடக்கு
- திருப்பூர் தெற்கு
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது (2019) |
7,62,935 | 7,66,765 | 136 | 15,29,836 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி | வென்ற வேட்பாளர் |
கூட்டணி |
2009 | அதிமுக | செ. சிவசாமி | – |
2014 | அதிமுக | சத்தியபாமா | – |
2019 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | சுப்பராயன் | திமுக |
2024 | சிபிஐ | கே. சுப்பராயன் | திமுக |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
அ.தி.மு.க வேட்பாளர் செ. சிவசாமி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | செ. சிவசாமி | 2,95,731 |
இந்திய தேசிய காங்கிரசு | கார்வேந்தன் | 2,10,385 |
கொமுபே | சி. பாலசுப்பரமணியம் | 95,299 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் சத்தியபாமா சின்னையன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | சத்தியபாமா | 4,42,778 |
திமுக | செந்தில்நாதன் | 2,05,411 |
தேமுதிக | என். தினேஷ்குமார் | 2,63,463 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே. சுப்பராயன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய கம்யூனிஸ்ட் | கே. சுப்பராயன் | 5,08,725 |
அதிமுக | ஆனந்தன் | 4,15,357 |
மக்கள் நீதி மய்யம் | சந்திரகுமார் | 64,657 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
சி.பி.ஐ வேட்பாளர் கே. சுப்பராயன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
சிபிஐ | கே. சுப்பராயன் | 4,72,739 |
அதிமுக | அருணாசலம் | 3,46,811 |
பாஜக | முருகானந்தம் | 1,85,322 |
இதையும் படிக்கலாம் : நீலகிரி மக்களவைத் தொகுதி