தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கரூர் மக்களவைத் தொகுதி 23வது தொகுதி ஆகும். காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை கொண்ட இந்த பகுதியின் முதன்மையான தொழில் விவசாயம். கரூர் பகுதியில் உள்ள ஜவுளி ஆலைகளும் முக்கிய தொழிலாக உள்ளது. மாட்டுக்கு மட்டுமின்றி முறுக்குக்கும் பெயர் பெற்ற மணப்பாறை இந்த தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது.
சட்டமன்ற தொகுதிகள்
கரூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- வேடசந்தூர்
- அரவக்குறிச்சி
- கரூர்
- கிருஷ்ணராயபுரம் (தனி)
- மணப்பாறை
- விராலிமலை
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
6,78,373 | 7,08,196 | 67 | 13,86,636 |
18 ஆவது (2024) |
4,22,511 | 4,56,557 | 65 | 8,79,133 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | பெரியசாமி கவுண்டர் |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். ராமநாதன் செட்டியார் |
1967 | சுதந்திராக் கட்சி | முத்துச்சாமி கவுண்டர் |
1971 | இந்திய தேசிய காங்கிரசு | கே. கோபால் |
1977 | இந்திய தேசிய காங்கிரசு | கே. கோபால் |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | ஏ. ஆர். முருகையா |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ஏ. ஆர். முருகையா |
1989 | அதிமுக | மு. தம்பிதுரை |
1991 | அதிமுக | என். முருகேசன் |
1996 | தமிழ் மாநில காங்கிரசு | கே. நாட்ராயன் |
1998 | அதிமுக | மு. தம்பிதுரை |
1999 | அதிமுக | எம். சின்னசாமி |
2004 | திமுக | கே. சி. பழனிசாமி |
2009 | அதிமுக | மு. தம்பிதுரை |
2014 | அதிமுக | மு. தம்பிதுரை |
2019 | இந்திய தேசிய காங்கிரசு | ஜோதிமணி |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | ஜோதிமணி |
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
தி.மு.க வேட்பாளர் கே. சி. பழனிசாமி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கே. சி. பழனிசாமி | 4,50,407 |
அதிமுக | ராஜா பழனிச்சாமி | 2,59,531 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
அ.தி.மு.க வேட்பாளர் மு. தம்பிதுரை வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | மு. தம்பிதுரை | 3,80,542 |
திமுக | கே. சி. பழனிசாமி | 3,33,288 |
தேமுதிக | ஆர். இராமநாதன் | 51,196 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் மு. தம்பிதுரை வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | மு. தம்பிதுரை | 5,40,722 |
திமுக | சின்னசாமி | 3,45,475 |
தேமுதிக | என். எஸ். கிருஷ்ணன் | 76,560 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | ஜோதிமணி | 6,95,697 |
அதிமுக | தம்பிதுரை | 2,75,151 |
நாம் தமிழர் கட்சி | கருப்பையா | 38,543 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | ஜோதிமணி | 5,34,906 |
அதிமுக | எல். தங்கவேல் | 3,68,090 |
பாஜக | செந்தில்நாதன் | 1,02,482 |
இதையும் படிக்கலாம் : திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி