விநாயகரை போற்றி வழிபடுவதற்கு ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து இருக்கிறோம். இதை விநாயக சதுர்த்தி அன்று படித்து பலன் பெறுங்கள்.
தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே !
கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே !
அற்புதம் நிகழ்த்துபவனே !
மோதகம் ஏந்தியவனே !
சந்திரனைத் தலையில் சூடியவனே !
உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே !
உன்னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கருணை காட்டும் கணபதியே !
உம்மை வணங்குகிறேன். தேவாதிதேவனே !
பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே !
வல்லமை நிறைந்தவனே !
ஆனைமுகனே !
கருணை மிக்க இதயம் கொண்டவனே !
அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே !
எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக. ஓங்கார வடிவினனே !
கருணாமூர்த்தியே !
பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே !
எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே !
பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே !
அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே !
நித்ய வடிவினே !
உன்னை வணங்குகிறேன். கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே !
சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே !
பக்தர்களின் துயர் களைபவனே !
ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே !
செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே !
உன்னை சரணடைந்து போற்றுகின்றேன்.
ஒற்றைக் கொம்பனே !
கணபதீஸ்வரா !
சிவ பெருமானின் பிள்ளையே !
ஆதிஅந்தமில்லாதவனே !
துன்பம் துடைப்பவனே !
யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே !
உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.
பலன்
- விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும்.
- தோஷங்கள் யாவும் நீங்கும்.
- வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும்.
- குலம்தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும்.
- மேம்பாடும் நற்புகழும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கை கூடும்.
இதையும் படிக்கலாம் : பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் மந்திரம்