முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும்.
இக்கோயிலுக்கு தொடர்ந்து 6 வாரம் வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
சிறுவாபுரி முருகனை மனமுறுகி வேண்டினால் பூமி சம்பந்தமாக அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும் , குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும் கடன் தொல்லை நீங்கவும் சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் கல்வி செல்வம் , செல்வ செழிப்பான வாழ்க்கை, கடன் பிரச்சினை தீருதல் என அனைத்து பிரார்த்தனைகளையும் இந்த முருகன் நிறைவேற்றி தருகிறார்.
Contents
சிறுவாபுரி கோவில் சிறப்பு
- இக்கோயில் சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலவர் நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் அனைத்தும் பச்சைக்கற்களால் ஆனது என்பது தான் விசேஷம்.
- கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது.
- இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.
- தை மாதத்தில் கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்து விட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரிக்கு 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தால் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- அழகு மயிலில் ஆடி வந்து முருகன் அருணகிரியாருக்கு காட்சி அளித்த இந்த தலத்திற்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன.
இதையும் படிக்கலாம் : வடபழனி முருகன் ஆலயம் அரிய தகவல்கள்