பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்
பந்தபா சந்தனிற் – றடுமாறிப்
பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்
பண்பிலா டம்பரப் – பொதுமாதர்
தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்
சங்கைமால் கொண்டிளைத் – தயராதே
தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனை
தந்துநீ யன்புவைத் – தருள்வாயே
அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்
தண்டவே தண்டமுட் – படவேதான்
அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
கண்டலோ கங்கொடுத் – தருள்வோனே
திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்
செஞ்சடா பஞ்சரத் – துறுதோகை
சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பஞ்ச பாதகம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 75