கோயிலில் உள்ள மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகத்தின் அளவையும் அதன் சிறப்பையும் பொறுத்தது.
அபிஷேகத்தில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவையே சிறந்தவை. எந்த விதமான அபிஷேகமும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய முடியும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன.
|
அபிஷேக பொருள் |
பலன்கள் |
| அன்னாபிஷேகம் | விளைநிலங்கள், நன்செய்தரும், நாடாளும் வாய்ப்பு அளிக்கும், அரசுரிமை, மோட்ச கதியை அடையலாம் |
| இளநீர் | நல் சந்ததியளிக்கும், ராஜயோகம் கொடுக்கும், இன்பங்கள் கிடைக்கும் |
| தயிர் | குழந்தைச் செல்வம் கிட்டும் |
| திருநீறு | சகல நன்மையும் தரும் |
| தேன் | சுகமளிக்கும், சங்கீதவிருத்தி, சங்கீத குரல் வளம் |
| நல்லெண்ணை | நலம் தரும் |
| நெய் | முக்தியளிக்கும், மோக்ஷம் அளிக்கும் |
| பசும்பால் | நீண்ட ஆயுள் தரும், சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் கிடைக்கும் |
| பஞ்சாமிருதம் | பலம், வெற்றி தரும் |
| பழபஞ்சாமிர்தம் | முக்தி, செழிப்பினைத் தரும், செல்வங்கள் பெருகும் |
| பன்னீர் | சருமம் காக்கும், குளிர்ச்சி தரும் |
| பால் | ஆயுள் விருத்தி |
| சந்தனக் குழம்பு | தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும், அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும், சுகம், பெருமை சேர்க்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் |
| எலுமிச்சம் பழச்சாறு | எமபயம் போக்கும், யமபய நாசம், நட்புடை சுற்றம் |
| சங்காபிஷேகம் | நலமெலாமளிக்கும் |
| சாத்துக்கொடி பழச்சாறு | துயர் துடைக்கும் |
| சர்க்கரை | பகைகளையும், பகைவரையும் அழிக்கும், சந்தோஷம் பிறக்கும் |
| அருகம்புல் ஜலம் | நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும் |
| குங்குமப்பூ | சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் |
| கருப்பஞ்சாறு | ஆரோக்கியமளிக்கும், தனம் விருத்தியாகும் |
| இளவெந்நீர் | முக்தி |
| சுத்த ஜலம் | நஷ்டமானவை திரும்பக் கிடைக்கும், விருப்பங்கள் நிறைவேறும் |
| உத்திராட்ச ஜலம் | ஐஸ்வர்யம் பெருகும். ஞானம் பெறலாம் |
| நன்னீர் | தூய்ப்பிக்கும் |
| பச்சரிசி மா | மல நாசம், கடன் தீரும் |
| பசுந்தயிர் | மகப்பேறு வாய்க்கும், தேஜஸ் கூடும் |
| பஞ்சகவ்யம் | தீதளிக்கும், ஆன்மசுத்தி, சுத்தம், சகல பாவத்தைப் போக்கும் |
| பச்சைக் கற்பூரம் | சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் |
| நாரத்தம் பழச்சாறு | மந்திர சித்தி ஆகும், ஒழுங்கு ஏற்படுத்தித் தரும், சந்ததி வாய்க்கும் |
| தேங்காய்த்துருவல் | அரசுரிமை |
| வாழைப்பழம் | பயிர் செழிக்கும் |
| வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) | மகப்பேறு தரும், போக யோக பாக்கியங்கள் கிடைக்கப் பெறலாம் |
| நெல்லிப்பருப்புப்பொடி | பிணிநீக்கம் |
| பலாப்பழம் | மங்கலம் தரும், யோகசித்தி |
| பல்லவம் | உலகை வயப்படுத்தும் |
| நாவல்பழ ரஸம் | வைராக்கியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும் |
| நவரத்தின ஜலம் | தனம் தான்யம் பெருகும். வீடு மனை யோகம் கிட்டும் |
| மாம்பழ ரஸம் | தீராத வியாதிகள் தீரும், செல்வம், வெற்றி தரும், மகனுக்குச் சீர் சேர்க்கும் |
| மாதுளம் பழச்சாறு | பகைமை அகற்றும், கோபத்தை நீக்கும் |
| மஞ்சட்பொடி | அரச வசியம், நல் நட்பு வாய்ப்பிக்கும் |
| பஸ்மத்தினால் | மஹா பாபங்கள் விலகும். புண்ணியங்கள் பெருகும் |
| புஷ்ப ஜலம் | வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும் |
| மஞ்சள் ஜலம் | மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும் |
| ஜவ்வாது | சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் |
| ஸ்வர்ண (தங்கம்) ஜலம் | முகம் தேஜஸ் பெறும். சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம் |
| ஸ்நபன கும்பாபிஷேகம் | சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும் |
| ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) | சகல சௌபாக்கியம் கிட்டும் |
| மாப்பொடி | கடன் நீக்கம் |
| மணம் உள்ள தைலம் | சுகம் தரும் |
| தமரத்தம் பழச்சாறு | மகிழ்ச்சி தரும் |
| ரசபஞ்சாமிர்தம் | முக்தி |
| தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) | சகல சௌபாக்கியம் கிட்டும் |
| திராட்சை ரஸம் | எடுத்த காரியம் வெற்றி தரும், திடசரீரம் அளிக்கும் |
| தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) | ஞானம் தரும் |
| திருமஞ்சனத்திரவியம் | பிணிநீக்கம் |
| புனுகு | சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் |
| கோரோசணை | சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் |
| கந்த தைலம் | இன்பம் |
| கொளஞ்சி நாரத்தைப் பழச்சாறு | சோகம் போக்கும் |
| கும்பஜலம் | பிறவிப்பயன் அளிக்கும் |
| கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸம் | ஸத்ருக்கள் இல்லாமல் போவார்கள் |
| கஸ்தூரி ஜலம் | சகல யோகங்களும் பெற்று வாழலாம் |
இதையும் படிக்கலாம் : அர்ச்சனைக்கு உரிய பூக்களும் அவற்றின் பலன்களும்