அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 21வது தொகுதியாக அண்ணா நகர் தொகுதி உள்ளது. இத் தொகுதி மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
இத்தொகுதியில் படித்தவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை மையமாகக் கொண்டது. தெலுங்கு பேசக்கூடிய நாயுடு சமுதாயத்தினர் 35 சதவீதம் பேர் உள்ள்னர். இத்தொகுதியில் தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய பகுதிகளும் அதிகம் உள்ளன.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | மு. கருணாநிதி | திமுக | 43,076 |
1980 | மு. கருணாநிதி | திமுக | 51,290 |
1984 | எஸ். எம். இராமச்சந்திரன் | திமுக | 65,341 |
1989 | க. அன்பழகன் | திமுக | 71,401 |
1991 | ஏ. செல்லகுமார் | இந்திய தேசிய காங்கிரசு | 75,512 |
1996 | ஆற்காடு வீராசாமி | திமுக | 1,03,819 |
2001 | ஆற்காடு வீராசாமி | திமுக | 77,353 |
2006 | ஆற்காடு வீராசாமி | திமுக | 1,00,099 |
2011 | சு. கோகுல இந்திரா | அதிமுக | 88,954 |
2016 | எம். கே. மோகன் | திமுக | 72,207 |
2021 | எம். கே. மோகன் | திமுக | 80,054 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,33,952 | 1,39,069 | 79 | 2,73,100 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 66 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை.