பழங்களில் எலுமிச்சை பழம் வழிபாட்டுக்கு உகந்தது. வாழைப்பழம் பூஜைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இறைவன் சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களுக்கும் எலுமிச்சை பழம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.
எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். இந்த பூஜையை ராகு காலத்திலும் செய்ய வேண்டும்.
இன்றும் கோவில்களில் எலுமிச்சை பழத்தால் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது.
மேல் மலையனூர் பகுதியில் எலுமிச்சம்பழ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.
அம்மனுக்கு எலுமிச்சை மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
பதினொன்று, ஐம்பத்தொன்று, நூறு, ஆயிரம் என எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றி வழிபடுவார்கள் பலர்.
புதிய கார் வாங்கும் போது, எல்லா பூஜைகளையும் செய்து, சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்களை நசுக்குவதும் உண்டு.
திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு எலுமிச்சம் பழம் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்கலாம் : ராகு கால எலுமிச்சை விளக்கின் மகிமை..!