புதன் கிரகத்தின் முக்கியத்துவம்
புதன் மந்திரம் என்பது நவகிரகங்களில் ஒருவரான புதன் பகவானை வணங்குவதற்கான முக்கிய வழிபாடாகும். இவர் அறிவு, பேச்சுத் திறன், கல்வி, கணக்கு, வாணிபம் மற்றும் துல்லியமான முடிவுகள் எடுக்க உதவும் தெய்வமாக போற்றப்படுகிறார். சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்த புதன் பகவான், புத்திசாலித்தனத்தின்(சின்னம்) என்று நம்பப்படுகிறது. தினமும் புதன் மந்திரங்களை ஜெபிப்பது, புத்திசாலித்தனம், நல்ல அறிவு, வசீகர பேச்சுத் திறன் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு சிறந்த பலன்களை தரும். குறிப்பாக புதன் தோஷம் உள்ளவர்கள், இந்த மந்திரத்தை நம்பிக்கையோடு சொன்னால் நல்லது நடக்கும்.
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
இதையும் படிக்கலாம் : புதன் பகவான் 108 போற்றி