தென் சென்னை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தென் சென்னை 3வது தொகுதி ஆகும்.

இந்த தொகுதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் தியாகராயநகர், கோயம்பேடு மார்கெட் போன்ற தமிழகத்தின் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் இந்த தொகுதியில் உள்ளன.

சட்டமன்ற தொகுதிகள்

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • விருகம்பாக்கம்
  • சைதாபேட்டை
  • தியாகராய நகர்
  • மைலாப்பூர்
  • வேளச்சேரி
  • சோழிங்கநல்லூர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
16 ஆவது

(2014)

9,00,950 8,94,141 313 17,95,404
17 ஆவது

(2019)

9,61,904 9,73,934 371 19,36,209

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு கட்சி வென்ற வேட்பாளர்
1957 இந்திய தேசிய காங்கிரசு டி. டி. கிருஷ்ணமாச்சாரி
1962 திமுக நாஞ்சில் கி. மனோகரன்
1967 திமுக பேரறிஞர் அண்ணா
1967 (இடைத்தேர்தல்) திமுக முரசொலி மாறன்
1971 திமுக முரசொலி மாறன்
1977 இந்திய தேசிய காங்கிரசு இரா. வெங்கட்ராமன்
1980 இந்திய தேசிய காங்கிரசு இரா. வெங்கட்ராமன்
1984 இந்திய தேசிய காங்கிரசு வைஜயந்திமாலா பாலி
1989 இந்திய தேசிய காங்கிரசு வைஜயந்திமாலா பாலி
1991 அதிமுக ஆர். ஸ்ரீதரன்
1996 திமுக த. ரா. பாலு
1998 திமுக த. ரா. பாலு
1999 திமுக த. ரா. பாலு
2004 திமுக த. ரா. பாலு
2009 அதிமுக சி. ராஜேந்திரன்
2014 அதிமுக ஜே. ஜெயவர்த்தன்
2019 திமுக தமிழச்சி தங்கப்பாண்டியன்
2024 திமுக தமிழச்சி தங்கப்பாண்டியன்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

தி.மு.க வேட்பாளர் த.இரா. பாலு வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக த.இரா. பாலு 5,64,578
அதிமுக பதர் சயீத் 3,43,838

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

அ.தி.மு.க வேட்பாளர் சி. இராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக சி. இராஜேந்திரன் 3,08,567
திமுக பாரதி 2,75,632
தேமுதிக வி. கோபிநாத் 67,291

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் ஜே. ஜெயவர்த்தன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக மருத்துவர் ஜே. ஜெயவர்த்தன் 4,38,404
திமுக டி. கே. எஸ். இளங்கோவன் 3,01,779
பாஜக இல. கணேசன் 2,56,786

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக தமிழச்சி தங்கப்பாண்டியன் 5,64,872
அதிமுக மருத்துவர் ஜே. ஜெயவர்த்தன் 3,02,649
மக்கள் நீதி மய்யம் ஆர். ரங்கராஜன் (இ.ஆ.ப – ஓய்வு) 1,35,465

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக தமிழச்சி தங்கப்பாண்டியன் 5,16,628
பாஜக தமிழிசை சௌந்தரராஜன் 2,90,683
அதிமுக ஜெ. ஜெயவர்த்தன் 1,72,491

இதையும் படிக்கலாம் : மத்திய சென்னை மக்களவைத் தொகுதி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *