தீபம் ஏற்றுவதால் தெய்வங்களை சமாதானப்படுத்துவதோடு நமது கர்மவினைகளை நீக்கும். தீபத்தை சரியாக ஏற்றி வைப்பது முக்கியம். எந்த விளக்குகளை எவ்வாறு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும். தினமும் இந்த மந்திரங்களை சொல்லி தீபம் ஏற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பிரம்ம முகூர்த்ததில் (காலை 4.30 – 6.00) சூரிய உதயத்திற்கு முன் தீபம் ஏற்றுவது மகத்தான புண்ணியத்தைத் தரும். முந்தைய பாவங்கள் நீங்கும். மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள பிரதோஷ நேரம் சிவனுக்கும் நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தது.
தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
தீபம் ஜோதி பரப்பரஹ்மம்: தீபம் ஜோதி
ஜனார்தணம்: தீபோமே ஹரது பாபம்:
தீபம் ஜோதி நமோஸ்துதே:
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம்
தன சம்பதம் சத்ரு புத்தி விநாசாய
தீபஜோதி நமோஸ்துதே!
தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
நல்லெண்ணெய் தீபம்
நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் குடும்பத்தில் எல்லா கஷ்டங்களும் தொலைந்து போகும்.
நெய் தீபம்
நெய் ஊற்றி, விளக்கு ஏற்றினால், வீட்டில் எல்லா விதமான மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
விளக்கெண்ணை தீபம்
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும்.
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
தீபம் ஏற்ற உகந்த திசைகள்
கிழக்கு திசை
கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். கிரக சோதனைகள் நீங்கும்.
மேற்கு திசை
மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தில்லை, கிரக தோஷம், பங்காளி பகை நீக்கும்.
வடக்கு திசை
வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கி செல்வமும், மங்கலமும் பெருகும்.
தெற்கு திசை
தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. இது ஒரு அபசகுனமாக பார்க்கப்படுகிறது.
வீட்டில் ஏற்றக்கூடாத தீபங்கள்
வீட்டில் பஞ்ச தீப எண்ணெயில் தீபம் ஏற்றாதீர்கள். எண்ணெய் விளக்குகள், எள் விளக்குகள், எலுமிச்சை விளக்குகள், தேங்காய் விளக்குகள் போன்ற விளக்குகளை ஏற்ற வேண்டாம். இதை கோயிலுக்குச் சென்று முறையாக ஏற்றி வழிபட வேண்டும்.
தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதுமாக தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விளக்கை விடாதீர்கள். அது தீங்கு விளைவிக்கும். பூக்கள் அல்லது குச்சிகள் மூலம் குளிர்விக்கப்படலாம்.
இதையும் படிக்கலாம் : வறுமை போக்கும் தீப வழிபாடு..!