வறுமை போக்கும் தீப வழிபாடு..!

தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும்.

தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

தீப வழிபாடு

தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும். பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாகத் தீப வழிபாடு செய்யலாம். வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு, பூட்டு போட்ட, தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.

வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.

சுபகாரியங்களில் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்து விளக்கு ஏற்ற வேண்டாம்.

குத்து விளக்கு மும்மூர்த்திகளின் படிவம். குத்து விளக்கின் தாமரை வடிவமான ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம அம்சம். நீண்ட தண்டு (நடுப்பாகம்) விளக்கேற்றி வைக்கும்போது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்க்க ஏற்றி வைக்கக் கூடாது.

இதையும் படிக்கலாம் : விளக்கேற்றும் பொழுது இதை கவனத்தில் கொள்ளுங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *