உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

dry raisins benefits

உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான். சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாகக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை பயன்படுத்தப்பட்டது.

சத்துக்கள்

40 கிராம் அல்லது ஒரு கையளவு உலர் திராட்சையில் கலோரிகள் : 108, புரோட்டின் : 1 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் : 29 கிராம், ஃபைபர் : 1 கிராம், சுகர் :  21 கிராம் உள்ளிட்டவை அடக்கம். தவிர உலர் திராட்சையில் இரும்பு, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி 6, மாங்கனீஸ், போரான் போன்ற சத்துக்களும் நிரம்பி உள்ளன. மேலும் இது பூஜ்ஜிய சதவிகித கொழுப்பு கொண்டது.

ரத்த சோகையை தடுக்கும்

உலர் திராட்சையில் நிரம்பி இருக்கும் இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் உலர் திராட்சையில் காப்பர் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. எனவே தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

எலும்பு மற்றும் பற்கள்

உலர் திராட்சையில் (dry Raisins) உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

மலச்சிக்கல்

ஃபைபர் சத்துமிக்க உலர் திராட்சை செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. தினசரி இந்த உலர் பழத்தை சாப்பிடுவதால் நல்ல குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் இருக்கும் டார்டாரிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

இதய நோய்

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

புற்றுநோய்

உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாக்கலாம். இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் திராட்சைகள் உதவுகின்றன.

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

இதையும் படிக்கலாம் : நாவல் பழம் நமது உடலுக்கு தரும் நன்மைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *