எழும்பூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 16வது தொகுதியாக எழும்பூர் தொகுதி உள்ளது.
இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | க. அன்பழகன் | திமுக | – |
1962 | ஜோதி வெங்கடாசலம் | இந்தியத் தேசிய காங்கிரசு | – |
1967 | ஏ. வி. பி. ஆசைத்தம்பி | திமுக | 36,133 |
1971 | இராம. அரங்கண்ணல் | திமுக | 40,596 |
1977 | எஸ். மணிமுடி | திமுக | 26,746 |
1980 | இளையபெருமாள் | இந்தியத் தேசிய காங்கிரசு | 38,200 |
1984 | எஸ். பாலன் | திமுக | 29,795 |
1989 | பரிதி இளம்வழுதி | திமுக | 38,032 |
1991 | பரிதி இளம்வழுதி | திமுக | 23,139 |
1996 | பரிதி இளம்வழுதி | திமுக | 51,061 |
2001 | பரிதி இளம்வழுதி | திமுக | 33,189 |
2006 | பரிதி இளம்வழுதி | திமுக | 38,455 |
2011 | கே. நல்லதம்பி | தேமுதிக | 51,772 |
2016 | கே. எஸ். இரவிச்சந்திரன் | திமுக | 55,060 |
2021 | ஐ. பரந்தாமன் | திமுக | 68,832 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 94,199 | 95,459 | 52 | 1,89,710 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரை.