இராயபுரம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 17வது தொகுதியாக இராயபுரம் தொகுதி உள்ளது.
2011ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதியாக இராயபுரம் இருந்தது. தற்போது கும்மிடிப்பூண்டி முதல் தொகுதியாக உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | பொன்னுரங்கம் | திமுக | 24,217 |
1980 | பொன்னுரங்கம் | திமுக | 37,390 |
1984 | பொன்னுரங்கம் | திமுக | 40,727 |
1989 | இரா. மதிவாணன் | திமுக | 37,742 |
1991 | து. ஜெயக்குமார் | அதிமுக | 46,218 |
1996 | இரா. மதிவாணன் | திமுக | 44,893 |
2001 | து. ஜெயக்குமார் | அதிமுக | 44,465 |
2006 | து. ஜெயக்குமார் | அதிமுக | 50,647 |
2011 | து. ஜெயக்குமார் | அதிமுக | 65,099 |
2016 | து. ஜெயக்குமார் | அதிமுக | 55,205 |
2021 | ஐட்ரீம் இரா. மூர்த்தி | திமுக | 64,424 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 92,397 | 96,185 | 57 | 1,88,639 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 48 முதல் 49, 50, 51, 52, 53 வரை.