
தேர்தல் பத்திரம் மூலம் திமுக பெற்ற நன்கொடையான 656.5 கோடி ரூபாயில் 509 கோடி ரூபாய் ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்திடமிருந்து பெற்றிருப்பது தெரிய வருகிறது.
இதில், திமுக கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன. யார் யாரிடம் எந்தெந்த தேதிகளில் பெற்றுள்ளன என்ற விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
15.4.2019 முதல் 31.3.2020 வரை
- இந்தியா சிமெண்ட்ஸ் – ரூ.10 கோடி
- லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (எம்.எல்.டபுல்யூ) – ரூ.1.50 கோடி
- ராம்கோ சிமெண்ட்ஸ் – ரூ.5 கோடி
- மேகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.20 கோடி
- அப்பல்லோ நிர்வாகம் – ரூ.1 கோடி
- திரிவேணி குழுமம் – ரூ.5 கோடி
- பிர்லா நிறுவனம் – ரூ.1 கோடி
- ஐஆர்பி இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.2 கோடி
கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து திமுக நிதியாக 45.50 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
23.10.2020 முதல் 29.10.2020 வரை
- ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் – ரூ.60 கோடி
- மேகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.20 கோடி என ரூ.80 கோடி பெற்றுள்ளது.
5.4.2021 முதல் 11.1.2022 வரை
- ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் – ரூ.249 கோடி
- மேகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.40 கோடி
- சன் நெட்வொர்க் – ரூ.10 கோடி
- இந்தியா சிமெண்ட்ஸ் – ரூ. 4 கோடி
- திரிவேணி குழுமம் – ரூ.3 கோடி என ரூ.306 கோடி ரூபாய் திமுக நிதியாக பெற்றுள்ளது.
11.4.2022 முதல் 12.10.2022 வரை
- ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் – ரூ.160 கோடி
- மேகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.25 கோடி என ரூ.185 கோடி நிதி பெற்றுள்ளது.
10.4.2023 அன்று ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்திமிடமிருந்து – ரூ.40 கோடி திமுக நிதியாக பெற்றுள்ளது.
இதையும் படிக்கலாம் : தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை