தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு வழியாகும். இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து அத்தகைய தேர்தல் பத்திரங்களைப் பெறலாம். அதன் மூலம், அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளிக்க முடியும்.
தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை
புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் பின்வருமாறு:
கட்சிகள் |
நன்கொடை தொகை |
பாஜக | ரூ.6,570 கோடி |
காங்கிரஸ் | ரூ.1,123 கோடி |
பிஆர்எஸ் | ரூ.912 கோடி |
திரிணமூல் காங்கிரஸ் | ரூ.823 கோடி |
பிஜு ஜனதா தளம் | ரூ.774 கோடி |
திமுக | ரூ.616 கோடி |
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் | ரூ.381 கோடி |
மார்க்சிஸ்ட் | ரூ.367 கோடி |
தேசியவாத காங்கிரஸ் | ரூ.231 கோடி |
பகுஜன் சமாஜ் | ரூ.85 கோடி |
இந்திய கம்யூனிஸ்ட் | ரூ.13 கோடி |
அதிமுக | ரூ.6.05 கோடி |
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய நாட்டின் முன்னணி நிறுவனங்கள்:
பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் – 1,368 கோடி ரூபாய்
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் – 966 கோடி ரூபாய்,
குயிக் சப்ளை செயின் நிறுவனம் – 410 கோடி ரூபாய்,
வேதாந்தா நிறுவனம் – 400 கோடி ரூபாய்,
ஹால்தியா எனர்ஜி – 377 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.
பார்த்தி குழுமம் – 247 கோடி ரூபாய்,
எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் – 224 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.
பியூச்சர் கேமிங் நிறுவனம் லாட்டரி மார்ட்டினுடையது என கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம் : இந்திய மக்களவைத் தொகுதிகள் பட்டியல்..!