மோதிரங்கள் அணிவதை இன்றய தலைமுறையினர் ஸ்டைல், பேஷன் என்பதை தாண்டி அது ஒரு கௌரவத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. தங்கம், வெள்ளி, வைரம் என அனைத்து மோதிரங்களையும் விரும்பி அணிகின்றன. ஆனால் இதை அணிவது உண்மையில் கௌரவத்தை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
இடது கை அல்லது வலது கை
பொதுவாக திருமணமான தம்பதியினர் மோதிரத்தினை இடது கையிலும் மற்றையவர்கள் வலது கையிலும் அணிவது வழக்கம். ஏனெனில் நமது வலது கை உடல் செயல்பாடுகளுடனும், இடது கை மனதின் செயல்பாடுகளுடனும் தொடர்பு கொண்டது. ஒவ்வொரு விரல்களுக்கும் ஒவ்வொரு வகையான அதிர்ஷ்டமும் பலனும் உண்டு.
கட்டை விரல்
கட்டை விரலில் மோதிரம் அணிவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் ஆற்றல்களை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
நீண்ட நாள் நோயிலிருந்து விடுபட விரும்பினால் கற்கள் மற்றும் உருவங்கள் அற்ற மோதிரத்தை கட்டை விரலில் அணிவது நல்லது.
ஆள்காட்டி விரல்
ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதால் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும் மேலும் பணியில் பதவி உயர்வு பெறவும் இந்த விரலில் மோதிரம் அணியலாம்.
இது ஒருவரின் தனிப்பட்ட ஆளுமையை அதிகரிக்கவும், சுயமரியாதை மற்றும் தன்னம்பிகையை அதிகரிக்கவும் செய்யும்.
நடுவிரல்
நடுவிரலில் மோதிரம் அணிவதால் காதல் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். இது ஒருவரை அதிக வசீகரமாக காட்டுவதுடன் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகளையும் குறைக்கும்.
இதையும் படிக்கலாம் : 12 ராசிகளுக்கு உரிய ராசி கற்கள் எவை தெரியுமா…
மோதிர விரல்
அதிக செல்வம் வேண்டுமென்று விரும்பினால் மோதிர விரலில் அணிய வேண்டியது அவசியம். இதை அணிவதால் செல்வத்தினை ஈட்டவும் பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும் உதவுகிறது.
சுண்டு விரல்
சுண்டு விரலில் மோதிரம் அணிவதால் உடலில் ஹார்மோன் சமநிலை மற்றும் புரிந்துணர்வு போன்றவற்றையும் அதிகரிக்கும். இந்த விரலில் அணியும் போது தங்கம் அல்லது செம்பு மோதிரத்தை மட்டும் அணியவும்.