12 ராசிகளுக்கு உரிய ராசி கற்கள் எவை தெரியுமா

ஒவ்வொரு ராசி மற்றும் கிரகத்திற்கு பொருத்தமான ராசிக்கல்லை அணிவதன் மூலம், அந்த ராசிநாதனின் அருளை அதிகம் பெறுவதுடன், எதிர்மறை விளைவுகளில் இருந்தும் தப்பலாம்.

இந்த பட்டியலில் 12 ராசிகளுக்கு உரிய ராசி கற்கள் எவை என்பதை அறிந்து அதை அணிந்து பலன் பெறுங்கள்.

மேஷம்

ராசி அதிபதி செவ்வாய்
ராசிக் கல் பவளம்
ராசியான நிறம் மஞ்சள்
ராசியான எண்கள் 1, 6
பலன் தெய்வ அனுகூலம் கிடைக்கும், தீய சிந்தனைகளை நம் மனதுக்குள் அனுமதிக்காது. நமக்கு தைரியத்தையும், மனநிம்மதியையும் தரும்.

ரிஷபம்

ராசி அதிபதி சுக்கிரன்
ராசிக் கல் வைரம்
ராசியான நிறம் மஞ்சள், நீலம், வெள்ளை
ராசியான எண்கள் 2, 6
பலன் வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது

மிதுனம்

ராசி அதிபதி புதன்
ராசிக் கல் மரகதம்
ராசியான நிறம் மஞ்சள், பச்சை
ராசியான எண்கள் 5, 9
பலன் தொழில் விருத்தியைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தரும். நல்ல கல்வியைக் கொடுக்கும். மேலும் தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும்.

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசையை நோக்கி இருக்கும் வீட்டில் இருப்பது நல்லது..

கடகம்

ராசி அதிபதி சந்திரன்
ராசிக் கல் முத்து
ராசியான நிறம் வெள்ளை, நீலம்
ராசியான எண்கள் 1,7
பலன் செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும்.

சிம்மம்

ராசி அதிபதி சூரியன்
ராசிக் கல் மாணிக்கம்
ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள், பச்சை
ராசியான எண்கள் 3, 5
பலன் இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் தரும்.

கன்னி

ராசி அதிபதி புதன்
ராசிக் கல் மரகதம்
ராசியான நிறம் பச்சை, மஞ்சள்
ராசியான எண்கள் 2,7
பலன் தொழில் விருத்தியையும், அளிக்க வல்லது. கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும்.

துலாம்

ராசி அதிபதி சுக்கிரன்
ராசிக் கல் வைரம்
ராசியான நிறம் வெள்ளை, இளஞ்சிவப்பு
ராசியான எண்கள் 3, 6
பலன் மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும். ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிகம்

ராசி அதிபதி செவ்வாய்
ராசிக் கல் பவளம்
ராசியான நிறம் ஆரஞ்சு, ஊதா
ராசியான எண்கள் 1,9
பலன் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும். பொறாமை, பயத்தைப் போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு

ராசி அதிபதி குரு
ராசிக்கல் கனக புஷ்பராகம்
ராசியான நிறம் மஞ்சள், நீலம்
ராசியான எண்கள் 1, 3, 9
பலன் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். பெரும் புகழ் கிடைக்கும்.

மகரம்

ராசி அதிபதி சனி
ராசிக்கல் நீலக்கல்
ராசியான நிறம் மஞ்சள், நீலம்
ராசியான எண்கள் 2,6
பலன் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும். நல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும். ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக் கூடியது.

கும்பம்

ராசி அதிபதி சனி
ராசிக்கல் நீலக்கல்
ராசியான நிறம் சிவப்பு, பச்சை
ராசியான எண்கள் 2, 9
பலன் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது. தியானத்துக்கு உகந்தது. திருமண உறவை மேம்படுத்தும்.

மீனம்

ராசி அதிபதி குரு
ராசிக்கல் கனக புஷ்பராகம்
பலன் செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிட்டும். திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *